‘பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா’ ஓய்வூதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் அருண் ஜேட்லி!

ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி மே மாதம் முதல் பிரதான் வாய வந்தன யோஜனா என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்த போதிலும் முறையான துவக்க விழா எதும் நடைப்பெறவும் இல்லை. பெரிதாக பிரபலமும் ஆகவில்லை. தற்போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் முறையாக பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா திட்டத்தினை வெள்ளிக்கிழமையான இன்று துவங்கி வைக்கின்றார்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலமாக 60 வயதிற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு 10 வருடங்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி உறுதியாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி செயல்படுத்தும்.

மூத்த குடிமக்களுக்கான பிற ஓய்வூதிய திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்தாலும் இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வட்டி விகிதம் நிரந்தரமானதாக இருக்கும்.

ஒரு வருடம் மட்டுமே முதலீடு செய்ய முடியும்

ஒரு வருடம் மட்டுமே முதலீடு செய்ய முடியும்

பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு வருடம் வரையில் மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இது ஒரு அரசு மானியம் வழங்கும் திட்டமாகும்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

இந்த திட்டம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு பெற்றுள்ளது. எனவே பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

எப்படி வாங்குவது?

எப்படி வாங்குவது?

ஆயுள் காப்பீடு நிறுவனத்தைப் பொருத்தவரை பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்ட பாலிசியை ஆஃப்லைன் மூலமாகவும் www.licindia.in என்ற இணையதளம் மூலமாகவும் வாங்கலாம்.

எத்தனை ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்?

எத்தனை ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்?

பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் அதாவது மாதா மாதம், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் என நான்கு கால அளவில் ஒன்றைத் தேர்வு செய்து ஓய்வூதியம் பெற முடியும்.

ஓய்வூதிய பணம் எவ்வாறு வழங்கப்படும்?

ஓய்வூதிய பணம் எவ்வாறு வழங்கப்படும்?

ஓய்வுதியதார்களுக்கு என்ஈஎப்டி பரிவர்த்தனை இணையதள வங்கி சேவை அல்லது ஆதார் பணப் பரிவர்த்தனை சேவை மூலமாக ஓய்வூதிய பணம் வழங்கப்படும்.

10 வருடங்களுக்குப் பிறகு என்னவாகும்?

10 வருடங்களுக்குப் பிறகு என்னவாகும்?

ஒருவேலை ஓய்வூதியதார்கள் 10 ஆண்டுகள் வரை பணம் பெற்று முடியும் போது பாலிசி வாங்கிய விலை மற்றும் ஓய்வூதிய தவனைத் தொகை என மொத்தமாக அனைத்தும் பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டத்தின் ஓய்வூதியதார்க்கு வழங்கப்படும்.

ஓய்வுதியதார்கள் இறந்தால் என்னவாகும்?

ஓய்வுதியதார்கள் இறந்தால் என்னவாகும்?

முதலீடு செய்த 10 ஆண்டுக் காலகட்டத்தில் ஓய்வுதியதார்கள் இறக்க நேர்ந்தால் பாலிசி வாங்கிய தொகை பயனாளிக்குத் திரும்ப அளிக்கப்படும்.

குறைந்தபட்ச வயது

குறைந்தபட்ச வயது

பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும். அதிகபட்ச வயது என்று ஏதும் இல்லை.

மாத பென்ஷன் திட்டம்

ஓய்வூதியதார்கள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பென்ஷன் பெற 1,50,000 ரூபாயும், 5000 ரூபாய் ஓய்வூதியம் பெற 7,50,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்

காலாண்டு பென்ஷன் திட்டம்

காலாண்டு பென்ஷன் திட்டம்

ஒவ்வொரு காலாண்டும் 3,000 ரூபாய் பென்ஷன் பெற 1,49,068 ரூபாயும், 15,000 ரூபாய் பென்ஷன் பெற 7,45,342 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

அரையாண்டு பென்ஷன் திட்டம்

அரையாண்டு பென்ஷன் திட்டம்

ஒவ்வொரு அரையாண்டும் 6,000 ரூபாய் பென்ஷன் பெற 1,47,601 ரூபாயும், 30,000 பெஷன் பெற 7,38,007 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

ஓர் ஆண்டுப் பென்ஷன் திட்டம்

ஓர் ஆண்டுப் பென்ஷன் திட்டம்

ஒவ்வொரு ஆண்டும் 12,000 ரூபாய் பென்ஷன் பெற 1,44,578 ரூபாயும், 60,000 ரூபாய் எப்ஷன் பெற 7,22,892 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

ஓய்வூதிய திட்டத்தால் குடும்பத்தில் யாரெலாம் பயன்பெறலாம்?

ஓய்வூதிய திட்டத்தால் குடும்பத்தில் யாரெலாம் பயன்பெறலாம்?

எல்ஐசி-ன் இந்தப் பிராதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதார்களைச் சார்ந்து உள்ள மனைவி அல்லது கணவன் அல்லது பிறருக்கு இந்த ஓய்வூதியத்தின் கீழ் தவனை முடிய 10 ஆண்டுகல் இருக்கும் போது இறக்க நேர்ந்தால் தொடர்ந்து ஓய்வூதிய பெற அனுமதி உண்டு.

அரசின் மானியம் எப்படி வழங்கப்படும்?

அரசின் மானியம் எப்படி வழங்கப்படும்?

முதலீடு செய்யும் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் மாத ஓய்வூதியதார்களுக்கு 80 ரூபாயும், காலாண்டு ஓய்வுதியதார்களுக்கு 80.50 ரூபாயும், அரையாண்டு ஓய்வுதியதார்களுக்கு 81.30 ரூபாயும், ஆண்டு ஓய்வூதியதார்களுக்கு 83 ரூபாயும் வழங்கப்படும்.

முன்கூடியே வெளியேறுதல்

முன்கூடியே வெளியேறுதல்

பிரதான் மந்திரி வாய வந்தன யோஜானா திட்டத்தின் கீழ் முதலீடு செய்தவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்கூடியே வெளியேற மருத்துவம், போன்ற காரணங்களுக்கு அனுமதி உண்டு. அப்போது 98 சதவீதம் முதலீடு செய்த தொகையினைப் பெற முடியும், கடன் வேண்டும் என்றால் முதலீடு செய்த தொகையில் 75 சதவீதம் வரை பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+