ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் வருவாயாக 90,537 கோடி ரூபாய் பெற்றுள்ளது, இது கடந்த வருடத்தை விட 26.7 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 7,113 கோடி ரூபாயில் இருந்து 9,108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனைத் தாண்டி இன்று வருடாந்திர கூட்டத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.
1.1 போனஸ் ஷேர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் முடியும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இந்த முறை போனஸாக ஒரு பங்கிற்கு ஒரு பங்கை அறிவித்தார். இந்தச் செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான அதிர்வுகள் ஏற்படுத்தியது.
வருடாந்திர லாபம்
இன்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 2017ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் லாப அளவுகளை அறிவித்தார்.
கடந்த நிதியாண்டில் கடந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 29,000 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது நிறுவனத்தைத் துவங்கிய வருடத்தை ஒப்பிடும் போது சுமார் 10,000 மடங்கு அதிகமாகும்.
வருவாய்
அதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் 2017ஆம் நிதியாண்டில் 3,30,000 கோடி ரூபாயாக உயர்ந்த உள்ளது.
ஏற்றுமதி
இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் ஆதிக்கம் அனைவரும் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், நாட்டின் மொத்த ஏற்றுமதி சந்தையில் ரிலையன்ஸ் ஆதிக்கம் செய்கிறது.
2017ஆம் நிதியாண்டில் செய்யப்பட்ட ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 8 சதவீதம் வைத்துள்ளது.
வரி
2017ஆம் நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுங்கம் மற்றும் கலால் வரியாகச் சுமார் 29,637 கோடி ரூபாயும், வருமான வரியாக 8,880 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளது.
முதலீடு
கடந்த வருடம் ரிலையன்ஸ் நிறுவனம் வருமானத்திற்கு இணையாக 3.30 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதில் 2 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் துறையிலும், 1.3 லட்சம் கோடி ரூபாய் எனர்ஜி மற்றும் மெட்டிரீயல் துறையிலும் முதலீடு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications