ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது, இக்கூட்டத்தில் இக்குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஜியோ மற்றும் பிற நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வருவாய் அளவுகளை வெளியிட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பை தாண்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது டெலிகாம் துறையை முக்கியமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
4ஜி பியூச்சர் போனை
இன்றைய கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று மலிவுவிலை 4ஜி பியூச்சர் போனை அறிமுகம் செய்தது.
இந்தப் போன் குறித்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவே செய்தியை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டணமில்லா போன்
ஜியோ அறிமுகம் செய்யும் 4ஜி பியூச்சர் போன் விலை 500 ரூபாயாக இருக்கும் எனக் கணிப்புகள் நிலவிய நிலையில், முகேஷ் அம்பானி இன்று 4ஜி பியூச்சர் போனை 0 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளார்.
1,500 ரூபாய் டெப்பாசிட்
ஜியோ ஃபோன் பெற விரும்புவோர் டெபாசிட்டாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்தத் தொகையானது 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப அளிக்கப்படும்.
ஆகஸ்ட் 24
இந்தப் போனை வாங்க புக்கிங் சேவை வருகிறது ஆகஸ்ட் 24ஆம் தேதி துவங்குகிறது. ஆனால் நம் கைகளில் செப்டம்பர் மாதம் மட்டுமே கிடைக்கும். இந்தப் போன் First come first serve என்ற முறையில் வழங்கப்படுகிறது. முதலில் புக் செய்பவருக்கு முதலில் மொபைல் அனுப்பப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஈகாமர்ஸ்
ஜியோவின் 4ஜி பியூச்சர் போனை இந்தியா முழுவதும் முறையாகச் சந்தை படுத்த பல முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களும் புக்கிங் மற்றும் விநியோகத்திற்காக இணைந்துள்ளது ஜியோ.
இந்தியா கா ஸ்மார்ட்போன்
இந்தப் போனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் உயர் அதிகாரி மற்றும் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி வெளியிட்டார்.
153 ரூபாய் மட்டுமே
மேலும் இந்தப் போனும், சேவையும் அனைத்துத் தரப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு முகேஷ் அம்பானி பியூச்சர் போன் வாங்கும் அனைவருக்கும் கிடைக்கும் 153 ரூபாய் என்ற கட்டணத்தில் சேவை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜியோவின் தன் தாண தன் ஆஃபர் திட்டமே பியூச்சர் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 153 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
முக்கிய ஆப்கள்
இந்தப் போன்களில் ஜியோ சினிமா, ஜியோ மியூசிங் எனப் பல முக்கிய ஆப்கள் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications