இந்தியாவின் முக்கிய 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடத்தினைப் பிடிப்பது குஜராத் ஆகும். குஜராத் இந்த இடத்தினைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகப் பிடித்துள்ளது.
தேசிய அப்ளைடு எக்னாமிக் ரிசர்ச் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் முதலீடுகளை ஈர்க்கும் மாநில பட்டியல் உழைப்பு, உள்கட்டமைப்பு, பொருளாதாரச் சூழ்நிலை, ஆளுமை மற்றும் அரசியல் நிலைத்தன்மை, உணர்வுகள், நிலம் மற்றும் 51 துணை குறிக்காட்டிகள் ஆகியவையினை வைத்து தயார் செய்யப்பட்டுள்ளது.
21. மேற்கு வங்கம்
இந்திய பொருளாதார வளர்ச்சியில் 6 இடங்கள் சரிந்து 21-ம் இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது.
20. உத்திர பிரதேசம்
உத்திர பிரதேசம் 1 இடம் சரிந்து 20 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
19. பீகார்
கடைசி இடத்தில் இருந்து பீகார் மாநிலம் 2 இடம் முன்னேறி 19வது இடத்தினைப் பிடித்துள்ளது.
18. ஜார்கண்டு
4 இடங்கள் சரிந்து 18வது இடத்தினை ஜார்கண்டு பிடித்துள்ளது.
17. அசாம்
3 இடங்கள் உயர்ந்து அசாம் 17வது இடத்தினைப் பிடித்துள்ளது.
16. பஞ்சாப்
1 இடம் முன்னேறி பஞ்சாப் மாநிலம் 16 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
15. ஹிமாச்சல் பிரதேசம்
4 இடங்கள் சரிந்து ஹிமாச்சல் பிரதேசம் 15வது இடத்தினைப் பிடித்துள்ளது.
14. சட்டிஸ்கர்
6 இடங்கள் சரிந்து சட்டிஸ்கர் 14 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
13. ராஜஸ்தான்
5 இடங்கள் உயர்ந்து 13 வது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது.
12. உத்தர்காண்ட்
5 இடங்கள் சரிந்து 12 வது இடத்தில் உத்தர்காண்ட் இடம்பெற்றுள்ளது.
11. ஒதிசா
1 இடம் முன்னேறி ஒதிசா 11-ம் இடத்தினைப் பிடித்துள்ளது.
10. மத்திய பிரதேசம்
தொழிற் செய்வதற்கு ஏற்ற நிலப்பகுதி இங்கு உள்ளதால் 1 இடம் சரிந்து 10 வது இடத்தினை மத்திய பிரதேசம் பிடித்துள்ளது.
9. கர்நாடகா
1 இடம் முன்னேறி 9வது இடத்தினைக் கர்நாடகா பிடித்துள்ளது.
8. மகாராஷ்டிரா
3 இடம் சரிந்து மகாராஷ்டிரா மாநிலம் 8 இடத்தினைப் பிடித்துள்ளது.
7. கேரளா
1 இடம் சரிந்து கேரளா 7வது இடத்தினைப் பிடித்துள்ளது.
6. தமிழ்நாடு
தொழிலாளர்கள் பிரச்சனைகளால் 3 இடங்கள் சரிந்து தமிழ்நாடு 6 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
5. தெலுங்கானா
8 இடங்கள் முன்னேறி தெலுங்கானா 5 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
4. ஹரியானா
12 இடங்கள் முன்னேறி ஹரியானா 4 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
3. ஆந்திர பிரதேசம்
1 இடம் முன்னேறி ஆந்திர பிரதேசம் 3 வது இடத்தினைப் பிடித்துள்ளது.
2. டெல்லி
தொழில் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளதால் தொடர்ந்து இரண்டு வருடங்களாக டெல்லி இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது.
1. குஜராத்
பொருளாதாரச் சூழல் நன்றாக உள்ளதால் தொடர்ந்து இரண்டு வருடங்களாகக் குஜராத் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் புது கணக்கு


Click it and Unblock the Notifications