ஒரு வருடத்தில் இந்திய விமானப் பயனர்கள் விமானத்தில் பறக்கும் போதும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமுக வலைத்தளங்களைப் பயன்படுத்தலாம்.
தற்போது விமானத்தில் பறக்கும் போது இணையதளச் சேவை மற்றும் சட்டிலைட் தொலைப்பேசி சேவையினைப் பாதுகாப்பு துறையினர் மட்டும் பயன்படுத்த அனுமதி உண்டு. ஆனால் இந்தச் சேவை விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கப் போகின்றது.
எப்படி விமானத்தில் பறக்கும் போது இது வேலை செய்யும்?
விமானப் பயணிகள் பறக்கும் போது வைஃபை சேவை மூலமாக இணையதளச் சேவையினைப் பெறலாம். இதற்காகப் பிரத்தியேகமான ஆண்டெனா ஒன்று சாட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டுச் சேவை வழங்கப்படும்.
எவ்வளவு வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம்
மத்திய அரசு ஒழுங்கு முறை ஆணையத்துடன் ஒப்புதல் பெற்ற பிறகு என்ன விலையில் இந்தச் சேவையினைப் பெற முடியும் என்று முடிவு செய்யப்பட்டு அலைவரிசைக்கு அனுமதி அளிக்கப்படும்.
விரைவில் பயன்பாட்டிற்கு
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் தொலைத்தொடர்பு துறையில் இருந்தும் அனுமதி பெற்றுள்ளது.
அனைவருக்கும் இணையச் சேவை
அமெரிக்காவைச் சேர்ந்த விமான அமைப்புகள் பிரிவான ஹனிவெல் அன்மையில் செய்த ஆய்வில் விமானங்களில் இணையதளச் சேவை மற்றும் சாட்டிலைட் போன் சேவை வழங்குவதன் மூலமாக 7 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும். 2025-ம் ஆண்டிற்குள் 25,000 விமானங்களில் இணையதளச் சேவை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications