செயலி மூலமாக டாக்ஸி சேவை அளித்து வரும் உபர் நிறுவனம் வெள்ளிக்கிழமை நொய்டா மற்றும் காசிபாத்தில் உபர் மோடோ என்ற சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சேவை ஏற்கனவே குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் உபர் வழங்கி வருகின்றது. சரி, உபர் மோடோ சேவை என்றால் என்ன அதனால் பைக் பிரியர்களுக்கு என்ன நன்மை என்று இங்குப் பார்ப்போம்.
நகரத்தில் எளிமையாகப் பயணம் செய்யலாம்
உபர் நிறுவனத்தின் நிர்வாகி பிரபஜித் சிங் உபர் மோடோ சேவை மூலமாக டெல்லி புற நகர் மற்றும் வட இந்தியாவின் பிற நகரப் பகுதிகளில் உள்ளவர்கள் எளிமையாகப் பயணம் செய்ய உதவும் என்று கூறினார்.
பொருளாதாரத்தில் மாற்றம்
உபர் மோடோ சேவையினை மாநில அரசு ஏற்றதற்கு நன்றி என்றும் இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நொய்டா மற்றும் காசிபாத்
"நொய்டா மற்றும் காசிபாத் இந்தச் சேவை துவங்கப்பட்டுள்ளதால், பைக் ரைடர்ஸ், போக்குவரத்து, நெரிசல் மற்றும் கடைசி நிமிட இணைப்பு போன்ற சிக்கல்களைப் பற்றிக் கவலைப்படாமல் டெல்லி புற நகர் முழுவதும் பயணிக்கும் வாய்ப்பை வழங்குவோம் என்று உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 நகரங்களில் உபர் மோடோ சேவை
உபர் மோடோ சேவை ஃபரிதாபாத், குர்கான், நொய்டா, கஜியாபாத், ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கிடைக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இது வரை 2 மில்லியன் டிரிப்புகள் வரை சேவை அளித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு
உபர் மோடோ சேவையின் மூலமாகக் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் டிராப்பிக் சிக்கல் இல்லாமல் பயணம் செய்யலாம். ஆனால் இந்தச் சேவை நொய்டா மற்றும் காசிபாத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் உபர் மோடோ வழங்கப்படுகின்றது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications