ஏடிஎம் மூலம் உடனடி கடன் பெறும் 'புதிய' வசதி.. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்..!

ஒரு வங்கியில் தனிநபர் கடன் என்று கூறப்படும் பெர்சனல் லோன் வாங்க வேண்டும் என்றால் ஏகப்பட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதுண்டு.

பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பத்தை சரிபார்ப்பது, பின்னர் அதை நடைமுறைக்கு அனுப்புவது, விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரிபார்ப்பது மற்றும் சில டாக்குமெண்ட் பணிகள் என கடன் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

ஆனால் தற்போது ஏடிஎம் சென்று உங்கள் சொந்தப்பணத்தை ஒருசில நொடிகளில் எடுத்து வருவது போன்று தனிநபர் கடன் விண்ணப்பத்தையும் ஏடிஎம் மிஷினிலேயே ஒருசில நிமிடங்களில் பூர்த்தி செய்யும் நடைமுறையை இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி கொண்டு வந்துள்ளது.

யார் யார் இந்த லோனை பெற முடியும்?

யார் யார் இந்த லோனை பெற முடியும்?

இந்த பெர்சனல் லோனை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நிரந்தர சம்பளம் வாங்கும் அனைவரும் ரூ.15 லட்சம் வரை பெற்று கொள்ளலாம். இந்த லோன் முழுக்க முழுக்க டிஜிட்டல் டாக்குமெண்ட் மூலமே நடைமுறைப்படுத்தப்படுகிறது. எந்தவிதமான பேப்பர் டாக்குமெண்ட்களும் கிடையாது

ஏடிஎம் மூலம் லோன் பெறுவதற்கான வழிமுறைகள்

ஏடிஎம் மூலம் லோன் பெறுவதற்கான வழிமுறைகள்

ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கவோ அல்லது பேனல்ஸ் தொகையையோ பார்த்து முடித்த பின்னர் திரையில் லோன் பெறுவது குறித்த அறிவிப்பு தோன்றும். எந்த ஒரு ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம்களிலும் இந்த லோன் குறித்த டிஜிட்டல் விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்

ஸ்டெப் 1:

ஸ்டெப் 1:

முதலில் வாடிக்கையாளர் தன்னுடைய முதல்கட்ட பரிவர்த்தனையை அதாவது பேலன்ஸ் தொகை பார்த்தல் அல்லது, பணம் எடுத்தல் அலல்து வேகமாக பணம் எடுத்தல் ஆகிய வேலையை முடித்து கொள்ள வேண்டும்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

முதல்கட்ட பணி முடிந்தவுடன் அந்த வாடிக்கையாளருக்கு பெர்சனல் லோன் பெறும் தகுதி இருந்தால் உடனே அதுகுறித்த தகவல் திரையில் தோன்றும். அவருக்கு அதிகபட்சமாக எவ்வளவு லோன் கிடைக்கும் என்ற தகவலும் அதில் இருக்கும். பின்னர் அந்த லோன் வசதி குறித்த பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

தற்போது வாடிக்கையாளருக்கு ஆறுவிதமான சலுகையுடன் கூடிய லோன் விபரம் குறித்த தகவல் தோன்றும். இந்த ஆறில் ஒன்றை வாடிக்கையாளர் தேர்வு செய்ய வேண்டும்

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4:

பின்னர் பெர்சனல் லோனுக்குரிய வட்டி விகிதம், செயலாக்க கட்டணம், மாதத்தவணை தொகை ஆகியவைகளை படித்து பார்த்து பின்னர் திரையில் கன்பர்ம் என்று உள்ள இடத்தை கிளிக் எய்ய வேண்டும்

ஸ்டெப் 5:

ஸ்டெப் 5:

இந்த நடைமுறை முடிந்துவுடன் திரையில் உங்கள் டெபிட் கார்டின் பின் நம்பர் கேட்கும். நீங்கள் சரியாக உங்களுடைய பின் நம்பரை பதிவு செய்ய வேண்டும்

ஸ்டெப் 6:

ஸ்டெப் 6:

பின் நம்பரை அழுத்தியவுடன் உங்களுக்கான லோன் தொகை உடனடியாக உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் ஏடிஎம் மிஷினில் மட்டுமின்றி இந்த டிஜிட்டல் பெர்சனல் லோனை வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கியின் இணையதளத்திலோ அல்லது ஐமொபைல் செயலியின் மூலமோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மூன்று முறை மட்டுமே

மூன்று முறை மட்டுமே

இந்த உடனடி பெர்சனல் லோன் சலுகை ஜூலை 7ஆம் தேதிக்கு பின்னர் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அவர்கள் பரிவர்த்தனை செய்யும்போது மூன்று முறை மட்டுமே தோன்றும்.

மேலும் பர்சனல் லோன் தேவையில்லை என்ற ஆப்சனை நீங்கள் ஒருமுறை தேர்வு செய்துவிட்டால் மீண்டும் இந்த வசதி குறித்த தகவல் தோன்றாது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+