காணாமல் போகும் வேலைவாய்ப்புகள்.. மோடி கையில் எடுக்கும் அடுத்த பிரச்சனை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் சுமார் 11 கோடி பேர் விவசாய துறையல்லாத பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இதை வகைப்படுத்தாத அதாவது Unorganised sector என்று அழைக்கப்படுகிறது.

தற்போது இத்துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வரும் காணத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய ஓட்டை விழும் என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

6.3 கோடி நிறுவனங்கள்

இந்த வகைப்படுத்தாத துறையில் மட்டும் சுமார் 6.3 கோடி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் ஒரு நிறுவனம் கூட நிறுவன சட்டம் அல்லது தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரவில்லை.

அதுமட்டும் அல்லாமல் 6.3 கோடி நிறுவனங்களில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருகிறது.

 

நாட்டின் உற்பத்தி

இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் 82 சதவீகம் வீட்டிலேயே அல்லது வீட்டிற்கு வெளியில் இருக்கும் இடத்தில் இயங்கி வருகிறது. மேலும் இதில் 98 சதவீத நிறுவனங்கள் வருடம் முழுவதும் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சக்திவாய்ந்த வகைப்படுத்தாத துறையின் உற்பத்தி அளவின் மதிப்பு மட்டும் 11.5 லட்சம் கோடி ரூபாய்.

 

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்

2015-16ஆம் நிதியாண்டில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் சுமார் 3 லட்சம் நிறுவனங்களை ஆய்வு செய்தது. இதேபோன்ற ஆய்வை 2010-11ஆம் நிதியாண்டிலும் நடத்தியது NSSO அமைப்பு.

இந்த இருகாலக்கட்டங்களை ஒப்பிடுகையில், நிறுவனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதாவது 57 லட்சம் நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளது. ஆனால் அச்சரியம் அளிக்கும் வகையில் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

3 சதவீதம் என்றால் தோராயமாக 33 லட்சம் ஊழியர்களுக்கு மட்டுமே இத்துறையில் புதிதாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

 

சம்பளம்

அதேபோல் இந்த 5 வருட காலத்தில் இத்துறையில் இருக்கும் ஊழியர்களின் சம்பள அளவுகள் 86 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. 2010-11ஆம் நிதியாண்டில் சராசரியாக வெறும் 4,000 ரூபாயாக இருந்த மாத சம்பளம் 2015-16ஆம் நிதியாண்டில் இது 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நம்பிக்கை

இந்த வகைப்படுத்தாத துறையை மைக்ரோ, ஸ்மால், காட்டேஜ் என பல பிரிவுகளில் பரிக்கலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாகவும், வேலைவாய்ப்பு சந்தைக்கு உயிர் நாடியாக இருக்கும் இத்துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொர்ந்து குறைந்து வருகிறது.

பிரச்சனை

இத்துறையில் பணப்புழக்கம், கடன் வசதிகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை எப்போதுமே குறைவு தான். இதனாலேயே தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் வர்த்தக பாதிப்பில் உள்ளது இத்துறை.

இதன் காரணமாகவே புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

 

36 சதவீத நிறுவனங்கள்

வகைப்படுத்தாத துறையில் இருக்கும் 6.3 கோடி நிறுவனங்களில் 36 சதவீத நிறுவனங்கள் உற்பத்தி துறையை சார்ந்து உள்ளது. மேலும் 50 சதவீத நிறுவனங்கள் உத்திர பிரதேசம், வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மோடி

இத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சனையை களைய மோடி தலைமையிலான மத்திய அரசு ஆலோசனை செய்ய துவங்கியுள்ளது.

ஜிஎஸ்டி

இந்தியாவில் ஜிஎஸ்டி அதாவது சரக்கு மற்றும் சேவை வரி வருவதற்கும் இவர்கள் தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.

இதுக்குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

 

வாட்டிவதைக்கும் 'ஜிஎஸ்டி'

சாமானிய மக்களை வாட்டிவதைக்கும் 'ஜிஎஸ்டி'.. என்னத்த சொல்ல நீங்களே பாருங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's informal sector jobs are drying up: Modi's next Target

India's informal sector jobs are drying up: Modi's next Target
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns