மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் ஏசியன் பெயின்ட்ஸ் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வெறும் 440.74 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பெற்றது. இது கடந்த காலாண்டின் லாப அளவுகளை விடவும் சுமார் 20.23 சதவீதம் குறைவான தொகை.
கடந்த காலாண்டில் இதன் அளவு 552.56 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த செலவுகள்
இக்காலக்கட்டத்தில் நிறுவனத்தின் மொத்த செலவீடுகள் 3,306.22 கோடி ரூபாயில் இருந்து 10.74 சதவீதம் உயர்ந்து 3,661.37 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தின் ஒப்பீடு.
மொத்த வருமானம்
இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை விடவும் 4.94 சதவீதம் உயர்ந்து 4,306.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.04 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 1,156.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்று நிஃப்டி குறியீடு 10,000 புள்ளிகள் என புதிய உச்சத்தை அடைந்தாலும் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications