டெல்லி: மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் தனது லோகோ-வை மாற்ற முடிவு செய்துள்ளது.
புதிய லோகோ மிகவும் இளைமைதுவமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ள தூர்தர்ஷன் இதற்காக போட்டியை அறிவித்துள்ளது.
1959ஆம் ஆண்டு முதல்
இந்தியாவின் இளைஞர்களை கவரவும், தூர்தர்ஷனை புதிய பிராண்டாக சந்தையில் முன்னிறுத்தவும், சந்தையில் இருக்கும் முன்னணி டிவி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷன் வளர முடிவு செய்துள்ளது.
இதற்காக 1959ஆம் ஆண்டு முதல் மாற்றமால் வைத்திருக்கும் தூர்தர்ஷன் லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது இதன் நிர்வாகம்.
இளைஞர்கள்
இப்புதிய லோகோ இளைஞர்களை கவர்வதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையாக கொண்டு தூர்தர்ஷன் இப்போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் மக்களும் கலந்துக்கொள்ளலாம்.
1 லட்சம் ரூபாய் பரிசு
ஆகஸ்ட் 13வரை லோகோ டிசைன்களை ஏற்றுக்கொள்ளும் தூர்தர்ஷன், தேர்வு செய்யப்படும் டிசைன்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு அளிக்க உள்ளது.
23 சேனல்கள்
தூர்தர்ஷன் கட்டுப்பாட்டில் இந்தியாவில் சுமார் 23 சேனல்கள் இயங்கி வருகிறது. மத்திய அரசு ஆல் இந்தியா ரோடியோ அடுத்த தற்போது தூர்தர்ஷனையும் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.
இதற்காக அதிகளவிலான நிதியையும் ஒதுக்கியுள்ளது.
வருவாய்
மார்ச்31 உடன் முடிந்த நிதியாண்டில் மட்டும் தூர்தர்ஷன் சுமார் 827.5 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற்றது. ஆனால் வருடாந்திர இலக்கு 800 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முந்தைய நிதியாண்டில் இதன் வருவாய் அளவு 755 கோடி ரூபாய்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications