வருமான வரி தாக்கல் செய்யும் போது கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரிப் பணம் திரும்ப வேண்டாம் என்றால் வங்கி விவரங்களை என்ஆர்ஐ-கள் அளிக்க வேண்டாம்.
என்ஆர்ஐ-கள் இந்தியாவில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்துக் கொண்டு இந்தியாவிலும் வரி செலுத்த வேண்டும் என்ற போது அவர்கள் செலுத்தும் கூடுதல் வரிப் பணம் திரும்ப வேண்டாம் என்றால் வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம் என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. அது குறித்து முழு விவரங்களை இங்குப் பார்ப்போம்.
விருப்ப முறை
வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்பது ஒரு விருப்ப முறை தான் என்றும் தேவை என்றால் அளிக்கலாம் என்று 157வது வருமான வரி தின விழாவில் பங்கேற்ற மத்திய நேரடி வரி விதிப்பு ஆணைத்தின் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக வெளிநாட்டு வங்கி கணக்கு எப்போது தேவை?
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகையில் ஐடிஆர்-2 படிவத்தின் கீழ் என்ஆர்ஐ-கள் கூடுதலாகச் செலுத்திய வரியை திரும்பப் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்றார்.
ஒரு நிபந்தனை
வருமான வரி தாக்கலின் போது கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரி திரும்ப வேண்டும் என்ற ஒரு நிபந்தனைக்காக மட்டும் வங்கி விவரங்களை அளிக்கவும் என்று சந்திரா கூறினார்.
ஐடிஆர்-2
2017 மார்ச் 31-ம் தேதி முதல் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் புதிய ஐடிஆர் படிவங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி ஐடிஆர்-2 படிவத்தில் வெளிநாட்டு வங்கி கணக்கு விவரங்களை என்ஆர்ஐ வருமான வரி செலுத்துனர்கள் செலுத்த வேண்டும்.
வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி
2016-2017 நிதி ஆண்டிற்கான வருமான வரி செலுத்த கடைசித் தேதி ஜூலை 31 ஆகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications