தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கும் மதுபான கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் மதுபான விற்பனை அதிகளவில் பாதித்துள்ளது.
இந்நிலையில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவில் 43.6 சதவீத அதிக லாபத்தை பெற்றுள்ளது. ஆனால் ஒரு வருத்தமான செய்தி.
லாபமும்.. வருமானமும்..
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 43.6 சதவீதம் அதிகமான லாபத்தை பெற்றுள்ளது, ஆனால் வருவாயில் 0.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
காரணம்..
இந்நிறுவனத்தின் இயக்க செலவுகள் அதிகரித்த காரணத்தால் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் பாதித்தாக தெரிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை வரிவாக்கம் செய்ய பிரன்சைஸ் மாடலை மிகப்பெரிய அளவில் கையாண்டது. இதன் காரணமாக வருவாய் சரிந்துள்ளது.
62.9 கோடி ரூபாய்
கடந்த வருடம் ஜூன் காலாண்டில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் வெறும் 43.8 கோடி ரூபாய் மட்டும லாபமாக பெற்ற நிலையில், 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 62.9 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது.
வருவாய் 5,877.2 கோடி ரூபாயில் இருந்ு 5847.7 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
விற்பனை மந்தம்
இந்நிறுவனத்தின் மிகப்பெரிய விற்பனை மதுபானமாக இருக்கும் பேக்பைபர், டைரக்டெர் ஸ்பெஷன் மற்றும் ஹோவார்ட்ஸ் விஸ்கி ஆகியவற்றின் விற்பனை 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.
பிரான்சைஸ்
இக்காலக்கட்டத்தில் பிரான்சைஸ் அளிக்கப்பட்டதில் கேரளா, ஆந்திர பிரதேஷ் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் அதிகளவிலான வருவாயை பெற்றது என யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரவு..
உச்ச நீதிமன்றம் உத்தரவின் காரணமாக சுமார் 8 சதவீதம் அளவிற்கு விற்பனையில் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications