டிஜிட்டல் பேமென்ட் பிளாட்பார்ம் நிறுவனமான ப்ரீசார்ஜ்-ஐ அமேசான் நிறுவனத்துடனான போட்டியில் நாட்டின் முக்கியத் தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி முழுமையாகக் கைப்பற்றியது.
இந்தியாவில் டிஜிட்டல் வேலெட் மற்றும் பேமெண்ட் சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில், இத்துறையில் நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் இறங்க முடிவு செய்துள்ளது. இதன்படி ப்ரீசார்ஜ் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஆக்சிஸ் வங்கி இத்துறையில் களமிறங்கியுள்ளது.
100 சதவீதம் டீல்
ஆக்சிஸ் வங்கி, ப்ரீசார்ஜ் நிறுவனத்தை மொத்த நிறுவனத்தையும் பணமாகக் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த ஒப்புதலில் ஆக்சிஸ் வங்கி மொத்த நிறுவனத்தையும் சுமார் 385 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளது. இதன் மூலம் மொத்த நிறுவனத்தின் பங்குகளையும் ஆக்சிஸ் வங்கி பெறுகிறது.
ஸ்னாப்டீல்
இந்தியாவில் பேடிஎம் ஆதிக்கம் செலத்த துவங்கியபோது ஸ்னாப்டீல் நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் இறங்க முடிவு செய்து பேடிஎம் நிறுவனத்திற்குப் போட்டியாக விளங்கிய ப்ரீசார்ஜ் நிறுவனத்தை 2015ஆம் ஆண்டு ஸ்னாப்டீல் நிறுவனம் முழுமையாகக் கைப்பற்றியது.
தொடர் சரிவு..
ஸ்னாப்டீல் நிறுவனத்தின் முடிவுகள் கைப்பற்ற என அனைத்தும் சரியாக இருந்த நிலையிலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒன்றாக ஸ்னாப்டீல் இல்லை.
இதனால் ஸ்னாப்டீல் தொடர் வர்த்தகச் சரிவை சந்தித்து வருவது மட்டுமல்லாமல் மொத்த நிறுவனத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
போட்டி..
இந்த முடிவின் முதல் படியாக ஸ்னாப்டீல் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ப்ரீசார்ஜ் நிறுவனம் தற்போது ஆக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை வாங்க அமேசான் மட்டுமல்லாமல் டைம்ஸ் இண்டர்நெட் நிறுவனமும் போட்டிபோட்டது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஸ் வங்கி
ப்ரீசார்ஜ் நிறுவனத்தின் சேவை இனி ஆக்சிஸ் வங்கியின் கோர் சேவையில் இருக்கும். இதன் மூலம் இவ்வங்கி ரீடைல் சேவையில் புதிய வர்த்தக விரிவாக்கம் இருக்கும் என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications