பொதுவாக வாகனங்களில் நாம் செல்லும்போது, விபத்துகளில் சிக்கிவிடக் கூடாது என்று பயப்படுவதை விட டிராபிக் போலீஸாரிடம் சிக்கிவிட கூடாது என்றே அதிகளவில் பயப்படுவோம்.
ஹெல்மெட் போடாமல் வண்டி ஒட்டுவது, ஓன்வேயில் செல்லுவது, ஓவர் ஸ்பீடு என பல காரணங்களுக்காக டிராபிக் போலீஸார் நம்மீது அபராதம் விதிப்பார்கள்.
இப்படி 2017ஆம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் சுமார் 10.4 கோடி ரூபாயை அபராதமாக வசூல் செய்துள்ளது. அடங்கப்பா...
மும்பை
இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் மட்டும் மும்பை டிராபிக் போலீஸார் சுமார் 6.31 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 10.4 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்துள்லது மும்பை டிராபிக் போலீஸ்.
வழக்குகள்
பாதசாரிகள் கடந்து செல்லும் பாதையில் வண்டியை நிறுத்தாமல் சென்றதற்காக மட்டும் சுமார் 1.92 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, பார்கிங் விதிகளை மீறிய காரணத்திற்காக 1.16 லட்சம் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பார்கிங் விதிகளை மீறியதற்காக மட்டுமே சுமார் 2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அபராத அளவு உயர்வு
பார்கிங் விதிகளை மீறியதற்கான கட்டணம் கடந்த வருடம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிராபிக் போலீஸ் அதிகாரிகள்
சாலை போக்குவரத்தில் நெறிசலை சீர்செய்வது மட்டுமல்லாமல் டிராபிக் போலீஸ் அதிகாரிகள் விதிகளை மீறுபவர்களை விரைவாக படித்து அவர்களின் அபராதம் விதிப்பை முக்கிய பணியாக கொண்டு செயல்படுகிறது என மும்பை டிராபிக் போலீஸ் அதிகாரிகள் ஒருவர் கூறினார்.
ஈ-சலான்
பணிகளை எளிதாக்க மும்பை டிராபிக் போலீஸ் அதிகாரிகள் ஈ-சலான் சேவையை தற்போது பயன்படுத்தி வருகின்றனர், இதனால் கடமை எளிமையாக முடிக்கப்படுவதாகவும் டிராபிக் போலீஸாக் தெரிவித்துள்ளனர்.
மேலும் விதிகளை மீறியவர்களை கண்டுப்பிடிக்க சிசிடிவி வீடியோவை அதிகளவில் கண்காணிப்பதாக தெரிவித்துள்ளது மும்பை டிராபிக் போலீஸ் துறை.
வசூல் பட்டியல்
பார்கிங் விதிமீறல் - 2 கோடி ரூபாய்
சிக்னல் மீறியவர்கள் - 1.05 கோடி ரூபாய்
டிரங்க் அன்ட் டிரைவ் 1.53 கோடி ரூபாய்
பாதசாரிகள் கடந்து செல்பவர்கள் - 95.73 லட்சம் ரூபாய்
ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் - 84.29 லட்சம் ரூபாய்
என பல பிரிவுகளின் மே மாதம் வரையில் மட்டும் சுமார் 10.4 கோடி ரூபாயை அபராதமாக வசூல் செய்துள்ளது மும்பை டிராபிக் போலீஸ் துறை.


Click it and Unblock the Notifications