மும்பை: நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டு லாபத்தில் சுமார் 8.2 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இவ்வங்கியின் வராக் கடன் அளவும் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், ஐசிஐசிஐ வங்கிக்கு தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
லாபம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஐசிஐசிஐ வங்கியின் மொத்த லாப அளவில் 2,232.35 கோடி ரூபாயில் இருந்து 2,049 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வராக் கடன்
மேலும் வராக் கடன் அளவு ஜூன் காலாண்டில் 1.4 சதவீதம் அதிகரித்து, 43,147.64 கோடி ரூபாயாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
வட்டி வருமானம்
இவ்வங்கி அளிக்கப்பட்ட கடனுக்கான வட்டியின் மூலம் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 5,589.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டை விடவும் சுமார் 8.36 சதவீதம் அதிகமாகும்.
பங்கு
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.63 சதவீதம் சரிந்து 296.05 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications