அம்பானிக்கு குட்டு வைக்க வரும் ஐடியாவின் அதிரடி திட்டம்..!

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 40வது ஆண்டு விழா கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ போன் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். இதே போன்ற ஒரு குறைந்த விலையிலான போனை ஐடியா நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஐடியா நிறுவனம் போன் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. அதே நேரம் போனுக்கு ஜியோ போன்று மானியம் ஏதும் வழங்கத் திட்டம் ஏதும் இல்லை என்று ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐடியா வோல்ட் சேவை

ஐடியா வோல்ட் சேவை

ஐடியா நிறுவனம் 2018-ம் ஆண்டு அரையாண்டிற்குள் வோல்ட் சேவையினை அளிக்க இருக்கின்றது. ஜியோ நிறுவனம் 2017 ஆகஸ்ட் மாதம் ஜியோ 4ஜி பியூச்சர் போனை வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

ஜியோ பியூச்சர் போன்

ஜியோ பியூச்சர் போன்

ஜியோ நிறுவனத்தின் பியூச்சர் போன் அறிவிப்பை கேள்விப்பட்ட வல்லுநர்கள் போட்டி நிறுவனங்களான ஐடியா, ஏர்டெல், வோடாபோன் ஆகியோர் புதிதாகப் போன் உற்பத்தியினைத் துவங்க வேண்டும் அல்லது பிற போன் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தத்தினைப் போட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசிடம் இருந்து ஐடியா எதிர்பார்க்கும் பங்களிப்பு

அரசிடம் இருந்து ஐடியா எதிர்பார்க்கும் பங்களிப்பு

இதற்கிடையில், ஐடியா, டெலிகாம் துறையின் மன அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கத்தின் பங்களிப்பை நம்புகிறது என்று தெரிவித்துள்ளது. வருவாய் இழப்புக்குச் செலவழிக்கச் செலவினங்களை மேம்படுத்த முயற்சிப்பதாகவும், சந்தையின் ஒருங்கிணைப்பு மற்றும் உயர்ந்த தரவுப் பயன்பாடு வருவாய் மீட்புக்கு வழிவகுக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்குகள் சரிவு

பங்குகள் சரிவு

ஐடியா நிறுவனப் பங்குகளும் சர்ந்துள்ளன. மூன்றாவது காலாண்டு நட்ட அறிக்கையினை அதான் ஐடியா வெளியிட்டுள்ளது. மறுபக்கம் சிஏஜி அறிக்கை டெலிகாம் நிறுவனங்கள் லாபம் அடைந்தும் நட்ட கணக்கை தான் காண்பிக்கின்றன என்று கூறியுள்ளது.

 816 கோடி நட்டம்

816 கோடி நட்டம்

ஐடியா நிறுவனம் 2017-2018 நிதி ஆண்டுக் காலாண்டு அறிக்கையில் 816 கோடி நட்டம் அடைந்துள்ளதா தெரிவித்துள்ளது. வருவாயின் சரிவு பார்தி ஏர்டெல் உடன் காணப்பட்டதைப் போலவே, ஜியோவின் ஆக்கிரோஷ சலுகைகளுக்குப் பிரதிபலிக்கும் விளைவாக இருக்கின்றது எனப் பேர்ன்ஸ்டைன் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

0 ரூபாய்க்கு ஜியோ போன்

0 ரூபாய்க்கு ஜியோ போன்

சென்ற வாரம் ஜியோ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4ஜி பியூச்சர் போன் திட்டத்தினைப் பற்றி அறிவித்த போது 1,500 ரூபாய் செக்யூரிட்டி டெப்பாசிட்டாக மூன்று வருடத்திற்கு அளித்தால் இலவசமாகப் போனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மூன்று வருடத்திற்குப் பிறகு போனைத் திருப்பி அளித்து விட்டு 1,500 ரூபாயினைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஜியோவின் 53 ரூபாய் ரீசார்ஜ்

ஜியோவின் 53 ரூபாய் ரீசார்ஜ்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளைத் தினமும் 500 எம்பி தரவுடன் அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

ஜியோ

ஜியோ

2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதல் ஜியோ டெலிகாம் சேவை வணிக ரீதியாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு அனைத்துச் சேவைகளையும் இலவசமாக அளித்தது.

ஐடியா

ஐடியா

அந்த நேரத்தில் ஐடியா நிறுவனம் 217.1 கோடி ரூபாய் லாபம் அடைந்ததாகக் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டு இருந்தது. ஆனால் இது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட இலவச அறிவிப்பில் காணாமல் போனது.

ஏர்டெல்

ஏர்டெல்

ஆச்சர்யமாக இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் வோல்ட் சேவையினை அறிமுகப்படுத்தும் பணியில் செயல்பட்டு வந்தாலும் போன் தயாரிப்பில் ஈடுபடப் போவதில்லை என்றும் அதற்கு மாறாகப் போன் உற்பத்தியாளர்களுடன் இணைந்து இலவச சிம் கார்டுகளை வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஜியோவின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்த பல முக்கியத் திட்டங்களை ஏர்டெல் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+