ஹெல்த்கேர் துறையில் இறங்கும் திட்டமிடும் ஐடிசி..!
ஹெல்த்கேர் துறையில் புதிய தரத்துடன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடாலிட்டி துறையில் நாட்டின் முன்னணி நுகர்வோர் பொருள் நிறுவனமான ஐடிசி களமிறங்க உள்ளது.
இதுக்குறித்து ஐடிசி நிறுவன தலைவர் ஓய்சி தேவேஷ்வர், இத்திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை தெரிவித்தார், இதன் மூலம் வருவாய் தாண்டியும் நோயாளிகளின் நலனை காக்கும் வகையில் புதிய திட்டத்தில் ஐடிசி ஹாஸ்பிடல்ஸ் துவங்குகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக நாட்டின் முக்கியமான இடத்தில் முதல் ஹாஸ்பிட்டல் துவங்க உள்ளது. ஆனால் இதற்கான இடத்தை இதுவரை ஐடிசி தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், டாக்டர்கள் நோயாளிகளிடம் இருந்து பணத்தை பெறாமல் புதிய முறையை கையாண்டும் வகையில், இப்புதிய திட்டம் இருக்கும் என தேவேஷ்வர் கூறினார்.


Click it and Unblock the Notifications