லாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..!
தென் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 40 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 26.44 கோடி ரூபாயாக பெற்றுள்ளது, மேலும் வருமானமாக இக்காலாண்டில் 1,466.75 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் இந்தியா சீமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ட்ரைநீட்ரா சிமெண்ட்ஸ் மற்றும் திரிசூல் கான்கிரீட் பிராடெக்ஸ் ஆகிய நிறுவனங்களை இணைத்தது. இக்காலாண்டு முடிவுகளில் இந்த நிறுவனங்களின் லாபத்தையும், வருமானத்தையும் இதில் சேர்க்கவில்லை.
கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 43.98 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்ககது.


Click it and Unblock the Notifications