பிராண்டட் பட்ஜெட் ஹோட்டல்கள் வர்த்தக துறையில் கொடிக்கட்டி பறக்கும் oyo ரூம்ஸ் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் சுமார் 496 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
இது கடந்த நிதியாண்டை விடவும் சுமார் 25 மடங்கு அதிகம் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.
சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் oyo ரூம்ஸ் நிறுவனம் ட்ரீபோ மற்றும் பேப்ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறது. 2016ஆம் நிதியாண்டில், இந்நிறுவனத்தின் செலவுகளின் அளவு 16 மடங்கு அதிகரித்து சுமார் 520 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதன் அளவு வெறும் 32 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் வாயிலாக சுமார் 225 மில்லியன் டாலர் நிதியை திரட்டியது. 2015ஆம் ஆண்டு வெறும் 2 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிய நிலையில், அப்போது 2016ஆம் ஆண்டில் 32 கோடி ரூபாயை ஈர்த்தது.
இதேகாலக்கட்டத்தில், oyo ரூம்ஸ் நிறுவனம் சுமார் 200 நகரங்களில் 7,000 ஹோட்டல்களை இணைத்து சேவை அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications