2016-17ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், பலவேறு சிக்கல்கள் இருக்கும் காரணத்தால், தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கண்டிப்பாக நீட்டிக்கப்படலாம் என நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 31க்குப் பின்
இதற்கான அறிவிப்பு ஜூலை 31ஆம் தேதிக்கு பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
முன்கூடியே அறிவித்தால் கடைசி நாளில் வருமான வரி தாக்கல் செய்யத் திட்டமிடுவோரும் தாக்கல் செய்யக் காலதாமதம் செய்வார்கள், இதனைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் கால நீட்டிப்புக்கான அறிவிப்பை ஜூலை 31ஆம் தேதிக்குப் பின் அறிவிக்கும்.
பல மாற்றங்கள்
இந்திய வரி விதிப்புகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால், வருமான வரி செலுத்துவோர் இந்த வருடம் பல விதிமானப் பிரச்சனைகளைச் சந்தித்தனர். இதன் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால நீட்டிப்பு கண்டிப்பாகச் செய்யப்படும் என மற்றொரு அரசு அதிகாரி தெரிவித்தார்.
தணிக்கையாளர்
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் நிறுவனங்களின் வரி மாற்றத்தில் அதிகளவில் ஈடுப்பட்டு இருந்த தணிக்கையாளர்கள், தனிநபர் வருமானத்தைக் கணக்கிடுவதில் மிகவும் குறைவான அளவு நேரத்தையே பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் தணிக்கையாளர்களுக்குக் கால நீட்டிப்புத் தேவைப்படுகிறது.
பான் மற்றும் ஆதார் இணைப்பு
வருமான வரி செலுத்துவோர் அனைவரும் ஆதார் எண்ணுடன் பான் கார்டு செலுத்த வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 45 சதவீத வருமான வரி செலுத்துவோர் மட்டுமே பான் மற்றும் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.
இது வருமான வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமையாக இருந்து வருகிறது.
அசாம்
அசாம் மாநிலம் வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாநில மக்களுக்கு அதிகளவிலான கால ஆவகசம் தேவை. இம்மாநில மக்களுக்குக் கண்டிப்பாகக் கால நீட்டிப்பு அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications