கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 அதாவது இன்றே கடைசி.
இன்று மக்கள் தங்களது வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான பணிகளை மிகவும் வேகவேகமாகச் செய்து வரும் நிலையில், பலர் வருமான வரியைச் செலுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம், இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குப் பின் வருமான வரியைத் தாக்கல் செய்தாலும், அதற்கு அபராதம் கிடையாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் வருமான வரித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை வருமான வரித்துறை படிப்படியாகத் தீர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் மக்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இந்த வருடம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கணித்த வருமான வரித்துறை காலதாமதமாக வருமான வரி செலுத்துவோருக்கு அபராதம் விதிப்பதை இந்த வருடம் நீக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications