நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்து அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள படி, இன்று முதல் சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி 2 வகையாக விதிக்கப்பட உள்ளது, இதன் மூலம் இரட்டை வட்டி விதிப்புகள் அமலுக்கு வந்துள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
இப்புதிய மாற்றத்தின் படி 1 கோடி ரூபாய்க்குக் குறைவாக வைப்பு நிதி வைத்திருக்கும் கணக்குகளுக்கு 3.5 சதவீத வட்டி மட்டுமே அளிக்கப்படும், இதற்கு முன்பு இது 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
4 சதவீத வட்டி
மேலும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிப்புக் கணக்குகளில் இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகள் மீது 4 சதவீத வட்டியை அளிக்கிறது.
சாமானியர்களுக்குப் பாதிப்பு
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சுமார் 95 சதவீதம் பேர் 1 கோடி ரூபாய்க்கு குறைவாகத் தான் வைப்பு நிதியை வைத்துள்ளனர். இவர்களை (சாமானியர்கள்) மையமாக வைத்தே எஸ்பிஐ வங்கி இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வட்டி வருமானம்
இந்த வட்டி மாற்றத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் வட்டி பணம் அதிகளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைத்த முதல் வங்கியும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
பிற வங்கிகள்
எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பின் மூலம் சந்தையில் இருக்கும் பிற பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications