பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்குக் கடைசித் தேதியினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி 2017 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
மத்திய நேரடி வரி துறையும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகு தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது.
இப்படிப் பட்ட சூழலில் நிதி அமைச்சகத்திடம் இருந்து வெளியாட் பல் டிவிட்டுகள் 2017 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
டிவிட் 1
மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அல்லது ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள எண்ணை உள்ளிட்டால் போதும் என்று தெரிவித்துள்ளது.
இணைப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்போது வேண்டுமானாலும் இணைக்கலாம், ஆனால் 2017 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் .
வருமான வரி தாக்கல்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.
காலக்கெடு நீட்டிப்பு
கடைசி நிமிட அவசரத்தினைத் தவிர்க வருமான வரி தாக்கல் செய்யக் காலக்கெடுவை ஆகஸ்ட் 5-ம் தேதி வரி நீட்டிப்புச் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
எதற்காக இணைக்க வேண்டும்?
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்துக்கொண்டு வரி ஏய்ப்புச் செய்பவர்களைக் குறைக்க முடியும்.
பிரிவு 139AA
வருமான வரிச் சட்டம் பிரிவு 139AA-ன் படி 2017 ஜூலை 1-க்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஆதார் பான் இணைப்புக் கட்டாயம். ஜூன் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பும் இதனை உறுதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications