1.44 கோடி சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் வேலை.. 16 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்..!
உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்-இல் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும்.
இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தின் 16 வயது சிறுவனுக்கு இந்த மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது கூகிள்.
ஹர்ஷித் சர்மா
சண்டிகர் மாநிலத்தின் செக்டார் 33 பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஹர்ஷித் சர்மா அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் கூகிள் நிறுவனத்தின் பணியாற்ற உள்ளார்.
கிராபிக்ஸ்
அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கூகிள் நிறுவனத்தின் செயல்பட்டு வரும் கிராபிக்ஸ் அணியில் ஹர்ஷித் சர்மா தனது ஒரு வருடப் பயிற்சிக்குப் பின் முழு ஊழியராகப் பணியாற்ற உள்ளார்.
சம்பளம்
கூகிள் நிறுவனத்தின் தேர்வாகியுள்ள ஹர்ஷித் சர்மா-விற்கு ஒரு வருடம் இந்நிறுவனத்தின் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஒரு வருட காலத்திற்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படும்.
பயிற்சி காலம் முடிந்த பின், இவருக்கு மாதம் சுமார் 12 லட்சம் ரூபாய் அதாவது வருடத்திற்கு 1.44 கோடி ரூபாய் சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார் ஹர்ஷித் சர்மா.
10 வருட பயிற்சி
இதுகுறித்து ஹர்ஷித் சர்மா கூறுகையில், கடந்த 10 வருடமாகக் கிராபிக்ஸ் டிசைனில் நான் கற்றுக்கொண்டு வருகிறேன், இத்துறையில் போதிய அளவிலா அனுபவம் கிடைத்த நிலையில் இணையதளத்தில் எனக்கான வேலையைத் தேட துவங்கினேன் என்று கூறினார்.
கூகிள் வேலைவாய்ப்பு
இந்நிலையில் கடந்த மே மாதம் கூகிள் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பம் செய்தேன், நான் தாயரித்த போஸ்டர்கள் மூலம் நான் தேர்வாகி இண்டர்வுயூவிற்கு அழைக்கப்பட்டேன்.
இண்டர்வியூவ் இணையத்தின் வாயிலாகவே நடத்து.
அப்பாயின்மென்ட் ஆர்டர்
தேர்வில் வெற்றிபெற்றதை அடுத்து, கூகிள் நிறுவனம் ஜூன் மாதத்தில் கூகிள் நிறுவனம் ஹர்ஷித் சர்மாவிற்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துள்ளது.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்
பள்ளிக்குப் பின் நான் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் போஸ்டர்களைத் தயாரித்தேன் இதன் மூலம் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை சம்பாதித்தேன் எனவும் ஹர்ஷித் சர்மா கூறினார்.
பெற்றோர்கள்
ஹர்ஷித் சர்மா பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள், 11வது படிக்கும் போது அவர் தகவல் தொழில்நுட்பத்தைப் படித்தார்.
டிஜிட்டல் இந்தியா
மேலும் அவர் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீவ் 7,000 ரூபாய் பரிசு பெற்றுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications