தமிழக அரசு திங்கட்கிழமை ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயினை விட அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு எல்லாம் இனி பொது விநியோகம் மூலம் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
எனவே நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் உள்ள எந்த மக்களுக்கு எல்லாம் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் மற்றும் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற முழுப் பட்டியலை இங்குப் பார்ப்போம்.
நகர்ப்புற பகுதிகளில் யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும்
1. ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தக் குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்பட்டுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
2. அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களா கொண்ட குடும்பங்கள்.
3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.
4. முதியோர் உதவித் தோகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள்
5. விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துக் குடும்பங்கள்.
6. மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்திற்கும் மிகுதியாக உடன் ஊனம் இருக்க வேண்டும்) லுடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
7. குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாடஹ்வர்கள், வேலை இல்லாதவர்கள், வேலைத் திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பறும் ழை பயனாளிகள்.
கிராமப்புற பகுதிகளில் யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும்
1. ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தக் குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்பட்டுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
2. அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களா கொண்ட குடும்பங்கள்.
3. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.
4. முதியோர் உதவித் தோகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள்
5. விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துக் குடும்பங்கள்.
6. மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்திற்கும் மிகுதியாக உடன் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
7. விவசாயக் கூலி தொழிலாளர்கள் கொண்ட குடும்பங்கள்
8. மக்கள் நிலை ஆய்வு (participatory ideniification of poor)ன் கீழ் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள்
யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் இருந்து பொருட்கள் வழங்குவதில் இருந்து நீக்கப்படும்
1. வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்
2. தொழில்வரி செலுத்துபவர்கள் உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்
3. பெறு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலை வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்.
4. மத்திய/மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
5. நான்கு சக்கர மோட்டார் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிகப் பயன்பாட்டிற்கா தினசரி வாழ்வாதாரத்திற்கு வைத்துள்ள குடும்பங்கள் நீங்கலாக)
6. குளிர் சாதான கருவி வைத்துள்ள குடும்பங்கள்
7. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை மேற்கூரை மற்றும் கவிர்களைக் கொண்ட வீடுகள்.
8. பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்
9. அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் 1,00,000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள குடும்பங்கள்
நிரந்தரமாக மூடும் திட்டத்தில் மத்திய அரசு
இணையதளம் மூலம் விண்ணப்பம்
குறியீட
சமையல் எரிவாயு மானியம்
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications