நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ்-இல் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 உயர் அதிகாரிகள் வெளியேறிய நிலையில், தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் பிராடெக்ட் மற்றும் பிளாட்பார்ம் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் புதிதாக வெளியேறியுள்ளார்.
இதன் மூலம் கடந்த 40 நாட்களில் 4 உயர் அதிகாரிகள் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
4வது உயர் அதிகாரி
இன்போசிஸ் நிறுவனத்தின் எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் குளோபல் ஹெட் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரியான அனீர்பென் டே கடந்த வாரம் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன் தற்போது அனீர்பென் டே நோட்டீஸ் காலத்தில் இருப்பதாகவும் இன்போசிஸ் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து இன்போசிஸ் நிர்வாகம் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மார்ச் 2015
அனீர்பென் டே, இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த மார்ச் 2015ஆம் ஆண்டு இணைந்தார். அன்று முதல் இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் சேல்ஸ், மார்கெட்டிங், சர்வீசஸ் மற்றும் ஆப்ரேஷன்ஸ் ஆகியவற்றை கவனித்து வந்தார்.
எட்ஜ்வெர்வ்
இன்போசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டின் 2.65 பில்லியன் டாலர் வருவாயில், சுமார் 5.4 சதவீதம் அதாவது 143.1 மில்லியன் டாலர் எட்ஜ்வெர்வ் நிறுவனத்தை சார்ந்துள்ளது.
எட்ஜ்வெர்வ் வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வங்கிசேவையான பினாக்கல் நிறுவனமும் அடங்கும்.
16 மாதத்தில் 10 அதிகாரிகள்
இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன் பல உயர் அதிகாரிகள் வெளியேறியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், 2016 மார்ச் மாதம் முதல் இன்று வரை சுமார் 10 உயர் மட்ட அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் துணை தலைவர் முதல் உயர் மட்ட நிர்வாக தலைவர்கள் முதல் அடக்கம்.
மைக்கல் ரே
பதவி : எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் தலைவர்
சேர்ந்த மாதம் : அக்டோபர் 2014
வெளியேறிய மாதம் : மார்ச் 16
ஸ்டெபனே முல்லெர்
பதவி : நிர்வாக இயக்குனர் பினாக்கல் மற்றும் எட்ஜ்வெர்வ்
சேர்ந்த மாதம் : ஜனவரி 15
வெளியேறிய மாதம் : மார்ச் 16
டேவிட் கென்னடி
பதவி : ஜெனரல் கவுன்சில் மற்றும் தலைமை இணக்க அதிகாரி
சேர்ந்த மாதம் : நவம்பர் 14
வெளியேறிய மாதம் : டிசம்பர் 16
மேட் ராடாஜி
பதவி : அசோசியேட் வைஸ் பிரசிடென்ட்
சேர்ந்த மாதம் : ஏப்ரல் 15
வெளியேறிய மாதம் : ஏப்ரல் 17
ஷமீனம் ஓக்ரே
பதவி : பினாக்கல் நிறுவனத்தின் டெலிவரி மற்றும் டெஸ்டிஹ் பிரிவின் தலைவர் மற்றும் வைஸ் பிரசிடென்ட்
சேர்ந்த மாதம் : ஏப்ரல் 15
வெளியேறிய மாதம் : ஏப்ரல் 17
கோர்டன் மியூல்
பதவி : இன்போசிஸ் ஜெர்மனி-யின் ஹெட் மற்றும் வைஸ் பிரசிடென்ட்
சேர்ந்த மாதம் : மே 2015
வெளியேறிய மாதம் : மே 2017
ஆனந்த் சின்ஹா
பதவி : பினாக்கல் நிறுவனத்தின் அசோசியேட் வைஸ் பிரசிடென்ட்
சேர்ந்த மாதம் : பிப்ரவரி 15
வெளியேறிய மாதம் : ஜூன் 17
ரித்திகா சூரி
பதவி : நிர்வாக துணை இயக்குனர்
சேர்ந்த மாதம் : செப்டம்பர் 14
வெளியேறிய மாதம் : ஜூலை 17
யூசப் பஷீர்
பதவி : நிர்வாக இயக்குனர்
சேர்ந்த மாதம் : ஏப்ரல் 15
வெளியேறிய மாதம் : ஜூலை 17
அனீர்பென் டே
பதவி : எட்ஜ்வெர்வ் நிறுவனத்தின் குளோபல் ஹெட் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரி
சேர்ந்த மாதம் : மார்ச் 15
வெளியேறிய மாதம் : ஜூலை 17
குறைந்த காலம்
பொதுவாக இன்போசிஸ் போன்ற பெரிய பெரிய நிறுவனத்தில் சேரும் உயர் அதிகாரிகள் குறைந்தபட்சம் 5 முதல் 10 வருடங்கள் வரை நிறுவனத்தில் பணியாற்றுவார்கள்.
விஷால் சிக்கா நியமனத்திற்கு பின் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் உயர் மட்ட நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பாலனவர்கள் அதிகப்படியாக 3 வருட மட்டுமே பணியாற்றியுள்ளார்.
புதிய நியமனம்
இந்நிலையில் அனீர்பென் பணியில் புதிதாக இன்போசிஸ் நிறுவனத்தின் இணைப்பு மற்றும் கைப்பற்றல் பிரிவின் (M&A) தலைவர் தீபக் படாகி நியமிக்கப்பட்டுள்ளாது. இந்த தகவல் எட்ஜ்வெர்வ் இணையத்தில் உள்ளது.
சிக்காவிற்கு முன்
இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன் வெளியேறிய பெரிய தலைகளின் பட்டியல்


Click it and Unblock the Notifications