நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பங்கு விற்பனையில் மூலம் அதிகளவிலான லாபத்தை பெற்றது. இப்போது இரண்டு இலக்க அளவில் லாபத்தை பெறும் எல்ஐசி இந்த முறை 145 சதவீதம் என மிகப்பெரிய அளவில் உயர்ந்து அசத்தியுள்ளது.
புதிய அறிமுகம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்ஐசி நிறுவனம் 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய திட்டத்தை அறிவித்தது. இப்புதிய திட்டத்தின் அறிமுகத்தின் மூலம் எல்ஐசியின் வர்த்தம் 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
லாபம்
2017ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எல்ஐசி நிறுவனம் சுமார் 6,100 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றது, இதில் பங்கு விற்பனையின் மூலம் 2,489 கோடி ரூபாய் பெற்று அசத்தியுள்ளது.
எல்ஜிசியின் இந்த லாபத்தை கடந்த நிதியாண்டு உடன் ஒப்பிடும் போது சுமார் 145 சதவீதம் அதிகமானது.
முதலீடு
ஜூலை மாதம் வரையில் எல்ஐசி நிறுவனம் சுமார் 16,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் மட்டும் சுமார் 43,800 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வராக்கடன்
எல்ஐசி நிறுவனத்தில் சுமார் 18,000 கோடி ரூபாய் வராக்கடன் உள்ளது, இதில் 13,000 கோடி ரூபாய் பிற வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட கடன்.
பாலிசிகள்
2017ஆம் நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான பாலிசிகளை விற்பனை செய்துள்ளது எல்ஐசி.


Click it and Unblock the Notifications