இந்தியாவில் முதல் இடம்.. ஆசியவில் 2வது இடம்.. முகேஷ் அம்பானியின் புதிய அவதாரம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜியத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஜியோ அறிமுகத்திற்கு பின் மளமளவென உயர்ந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது 77,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பில் இது 12.1 பில்லியன் டாலர். இந்த திடீர் சொத்து மதிப்பு உயர்வின் முகேஷ் அம்பானி இந்தியாவை தாண்டியும் ஆசிய கண்டத்தின் அளவில் புதிய இடத்தை பிடித்துள்ளார்.

ஆசிய கண்டம்

ஆசிய கண்டம்

இதுவரை இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மட்டுமே போட்டி போட்டு வந்த முகேஷ் அம்பானி தற்போது, ஆசிய கண்டம் முழுவதிலும் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 77,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஆசிய கண்ட அளவில் இரண்டாவது பணக்காரர் ஆக திகழ்ந்த லீ கா ஷிங் பின்னுக்கு தள்ளப்படும் இந்த இடத்தை பிடித்தார். இவர் ஹாங்காங் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வாயிலாக முகேஷ் அம்பானி ஆசிய கண்ட அளவில் 2வது பெரிய பணக்காரராக உள்ளார்.

 

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்

2017ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 2.2 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்தை பிடித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் இறுதியில் இவர் 29வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பங்கு மதிப்பு உயர்வு

பங்கு மதிப்பு உயர்வு

இந்த திடீர் உயர்வுக்கு காரணம் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவையான ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+