மோடியின் திட்டம் நிறைவேறாது.. மத்திய அமைச்சர் உறுதி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் மோடி தலைமையிலான அரசு பல மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், இந்தியாவின் நிதியாண்டு காலத்தை ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு மாற்ற மோடி தலைமையிலான குழு ஆலோசனை செய்து வந்தது.

இந்நிலையில், மோடியின் கனவு திட்டமான நிதியாண்டு மாற்றம் செய்யப்படும் திட்டம் குறித்த முக்கியச் செய்திகளைச் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்.

சந்தோஷ் குமார் கங்வார்

மாநில நிதியமைச்சராக இருக்கும் சந்தோஷ் குமார் கங்வார், நிதியாண்டு மாற்றம் குறித்த ஆலோசனை அனைத்தும் மத்திய அரசு வட்டாரத்திலேயே இருந்து வருகிறது. மேலும் இந்த மாற்றம் கண்டிப்பாக அடுத்த நிதியாண்டில் செய்யப்படாது.

பட்ஜெட் தாக்கல்

நிதியாண்டு மாற்றம் ஜனவரி 2018ஆம் ஆண்டு முதல் துவங்க வேண்டுமென்றால் 2017ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

பட்ஜெட் கணக்கீடு பணிகள் அனைத்தையும் முன்கூட்டியே துவங்கி அரசு தரவுகளை அடுத்தச் சில மாதங்களுக்குள் ஆய்வு செய்து அடத்த 9 மாதங்களுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.

இது தற்போது இருக்கும் குறுகிய காலகட்டத்திற்குச் செய்ய முடியாது என்பதால் நிதியாண்டு மாற்றம் இந்த வருடம் நடைமுறைக்கு வராது.

 

அருண் ஜேட்லி

சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத்தில் கூட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிதியாண்டு மாற்றம் உடனடியாகச் செய்ய முடியாது, இதற்கான ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் காரணத்தால், 2018ஆம் ஆண்டு மத்தியில் இதற்கான பணிகள் துவங்கப்படும்.

மத்திய அரசு

நிதியாண்டு மாற்றம் குறித்துத் தொடர்ந்து ஆலோசனை மட்டும் நடைபெற்று வருவதாகக் கூறிவரும் மத்திய அரசு, இதுவரை எவ்விதமான உறுதியான அறிவிப்புகளையும் அறிவிக்கவில்லை.

ஜிஎஸ்டி

நிதித்துறை வல்லுனர்கள் கூறுகையில், நிதியாண்டு மாற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருப்பதும் இல்லாததும், அடுத்த விஷயம். இந்திய சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் புதிய நிதியாண்டுக்கு மாற வேண்டும் என்பது மிகவும் கடுமையான விஷயம்.

மேலும் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட தற்போதைய நிலையில், நிறுவனங்கள் பல மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது.

 

3 காலாண்டுகள்

நிதியாண்டு மாற்றத்தை 2018ஆம் ஆண்டில் அறிவித்தாலும் சரி 2019ஆம் ஆண்டில் அறிவித்தாலும் சரி, அந்த நிதியாண்டில் நிறுவனங்கள், மத்திய மாநிஸ அரசுகளின் பட்ஜெட் அறிக்கை என அனைத்தும் 3 காலாண்டுக்கான முடிவுகளை மட்டுமே காட்ட முடியும்.

இதனை எப்படிப் பொருளாதார வளர்ச்சியில் கணக்கு காட்ட முடியும். இது மகிப்பெரிய பாதிப்பை அடுத்த நிதியாண்டுகளில் எதிரொலிக்கும்.

 

கைவிடப்படலாம்..

நிதியாண்டு மாற்றத்தின் மூலம் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால், மத்திய அரசால் இத்திட்டம் கைவிடப்படலாம்.

அரசு நிறுவனங்கள், துறைகள் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை முன்கூட்டியே பயன்படுத்த பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் அறிவிக்கப்பட வேண்டிய பட்ஜெட் அறிக்கை, முதல் நாளில் அறிவிக்கப்பட்டது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

No plan to shift to Jan Dec financial year from 2018

No plan to shift to Jan Dec financial year from 2018
Story first published: Tuesday, August 1, 2017, 14:14 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns