இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் தனது நிறுவனத்தில் மீன்உ ஒரு மிகப் பெரிய ஊழியர்களைப் பணி நீக்கத்தினைச் செய்ய இருக்கின்றது. இதனால் 80 சதவீத ஸ்னாப்டீல் ஊழியர்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நமக்கு அளித்த தகவலில் ஊழியர்களிடம் நிர்வாகம் வாய்மொழியாகப் பணி நீக்கத்தினை அறிவித்துள்ளதாகவும் இதற்கான பட்டியலில் துறை சார்ந்த அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஸ்னாப்டீலின் அறிவிப்பு
நிறுவனத்தின் தலைவர்கள் ஸ்னாப்டீல் நிறுவனத்தினைப் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் ப்ரீசார்ஜ் நிறுவனத்தினை விற்றதன் மூலம் 50 மில்லியன் டாலர்களை இவர்கள் பெற்றுள்ளனர்.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தற்போது 1,200 ஊழியர்கள் உள்ள நிலையில் 1,000 ஊழியர்களை நிக்கிவிட்டு மீதம் உள்ள 200 நபர்களை மட்டும் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
ஒரு ஆண்டாக நடைபெற்று வந்த கலை எடுப்பு பணி
சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 9,000 ஊழியர்கள் இருந்தார்கள். ஆனால் நிர்வாகம் எடுத்த திறமைக்கான ஆய்வில் 1,200 நபர்களாக எந்த அறிவிப்பும் இல்லாமல் சுருங்கியுள்ளது.
மீதமுள்ள ஊழியர்களின் நிலை
மீதமுள்ள ஊழியர்கள் பிளிப்கார்ட்-ஸ்னாப்டீல் இணைப்புக்கு ஆதரவளித்துள்ள நிலையில், தங்கள் வேலைகளைக் காப்பாற்ற முயற்சிக்கையில் இறங்கி உள்ள நிலையில் , அதிகாரத்தை வைத்துள்ளவர்கள் அவர்கள் நிலை குறைத்துக்கொள்ள விரும்பாமலும் உள்ளனர்.
பிளிப்கார்ட் ஆஃபர்
பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே 1750 மில்லியன் டாலர்கள் அளிக்க முடிவு செய்து இரண்டு ஆஃபர்களை அடுத்தடுத்து வெளியிட்டது. ஆனால் நிறுவனர்கள் இரண்டு மாதங்களாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த நிலையில் தற்போது இணைவிற்கு ஒப்புக்கொண்டனர்.
பிளிப்கார்ட் நிறுவனர்களின் அறிவிப்பு
குனால் மற்றும் ரோகித் பன்சால் இருவரும் அவர்களது வணிகம் மற்றும் தொழில்நுட்ப தலைவர்களை மாற்றி அமைக்கும் படியும், ஊழியர்கள் பணி நீக்கம் செய்வதற்கான பணிகளையும் துவங்குமாறு அறிவித்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications