வங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..!

ஹாட் நியூஸை ஷாட்டா படிக்க: தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின்

'ஸ்பீக்கர் பாக்ஸ்'

வங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..!

வங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..!

வங்கியில் வாங்கிய 25 மில்லியன் யுவான் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வங்கியை ஏமாற்ற முடிவு செய்த 59 வயதான பெண் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை முழுமையாக மாற்றியுள்ளார்.

இந்தப் பெண் மத்திய சீனாவின் உஹான் நகரத்தைச் சேர்ந்தவர் எனச் சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்கூவா தெரிவித்துள்ளது.

இப்படி இந்தியாவில் செய்யத் துவங்கினால் அவ்வளவுதான்..

 

பெண் தொழிலதிபர்கள் உருவாக்குவதில் பெங்களுரு 40வது இடம்..!

பெண் தொழிலதிபர்கள் உருவாக்குவதில் பெங்களுரு 40வது இடம்..!

கடந்த சில வருடங்களாக உலகமும் முழுவதும் பெண் தொழிலதிபர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெல் நிறுவனத்தின் உதவியுடன் பெண் தலைமையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் எண்ணிக்கையின் படி உலக நாடுகளில் இருக்கும் முக்கியமான நகரங்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து டாப் 50 நகரங்கள் பட்டியலில் 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் படி 40வது இடத்தில் பெங்களுரூ மற்றும் 49வது இடத்தில் டெல்லியும் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியலில் முதல் இடம் நியூயார்க் நகருக்குக் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பே ஏரியா, லண்டன், பாஸ்டன் மற்றும் Stockholm ஆகியவை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.

 

8 வருட சரிவில் இந்திய உற்பத்தி துறை..!

8 வருட சரிவில் இந்திய உற்பத்தி துறை..!

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டதன் மூலம் இந்திய உற்பத்தித் துறையில் புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தி அளவுகளில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் இந்திய உற்பத்தித் துறை சுமார் 8 வருடச் சரிவை சந்தித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான நிக்கி இந்தியா உற்பத்தி பிஎம்ஐ குறியீடு 47.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இது பிப்ரவரி 2009ஆம் ஆண்டை விடக் குறைவான அளவாகும். மேலும் ஜூன் மாதத்தில் இதன் அளவு 50.9 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

19 மாத சரிவில் உள்கட்டமைப்பு துறை..

19 மாத சரிவில் உள்கட்டமைப்பு துறை..

இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறை சுமார் 19 மாத சரிவில் தவிக்கிறது. நாட்டின் உள்கட்டமைப்புக்குக் கீழ் இருக்கும் 8 துறைகளில் சிமெண்ட், மின்சாரம், நிலக்கரி ஆகிவற்றின் உற்பத்தி அளவுகள் குறைந்துள்ளது.

ஜூன் மாதத்தில் இதன் அளவு 0.4 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது.மே மாதத்தில் இது 4.1 சதவீதமாகவும், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் இது 7 சதவீதம் அளவிற்கு விரிவாக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்புத் துறையில் இருக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 துறைகள் நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தியில் 40.27% பங்கீட்டில் உள்ளது.

 

சிஸ்கோ இந்தியாவின் புதிய தலைவர் சமீர் கார்டே

சிஸ்கோ இந்தியாவின் புதிய தலைவர் சமீர் கார்டே

உலகின் முன்னணி வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிஸ்கோ இந்தியா மற்றும் சார்க் பகுதிகளின் தலைவராகச் சமீர் கார்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பிலிப்ஸ் ஹெத்கேர் நிறுவனத்தின் நிர்வாகப் பணியில் இருந்தவர்.

 

இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் IGST வரி 60% உயர்ந்தது..!

இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் IGST வரி 60% உயர்ந்தது..!

நாட்டின் மறைமுக வரி முழுமையாக நீக்கப்பட்டு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் ஐஜிஎஸ்டி வரி வசூல் 20,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மொத்த சுங்க வரி வசூல் அளவு 26,500 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் இது 16,625 கோடி ரூபாயாக இருந்தது.

 

ஜூலை மாதத்தில் சராசரி அளவை விடப் பருவமழை அதிகமாக இருந்தது..!

ஜூலை மாதத்தில் சராசரி அளவை விடப் பருவமழை அதிகமாக இருந்தது..!

கடந்த மாதத்தை விடவும் ஜூலை மாதத்தில் பருவமழையின் அளவு சுமார் 4 சதவீதம் அதிகமாக இருந்தது. இது சராசரி ஜூலை மாத அளவீடுகளை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 290.4 மில்லிமீட்டர் அளவிற்குப் பருவமழை பெய்தது.

 

6.6 சதவீதமாக உயர்ந்த ஜிடிபி

6.6 சதவீதமாக உயர்ந்த ஜிடிபி

ஜூன் மாத காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்கும் என நோமூரா தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் உற்பத்தி சந்தை, சேவை சந்தை என அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் ஜிடிபி அளவில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும் நோமூரா தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் ஆதார் அங்கீகார எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது..!

ஜூலை மாதத்தில் ஆதார் அங்கீகார எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது..!

மத்திய அரசு ஆதார் எண்ணுக்குப் பல நெருக்கடி அளித்து வரும் நிலையில், ஜூலை மாதத்தில் ஆதார் எண்ணுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்தின் எண்ணிக்கை 94 கோடியை எட்டியது.

இது கடந்த 3 மாதத்திற்கு முன்பை விடவும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+