1.44 கோடி சம்பளத்துடன் கூகிள் நிறுவனத்தில் வேலை.. 16 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட் என்று நேற்று நாம் மட்டும் இல்லாமல் பிற செய்தி நிறுவனங்களும் வெளியிட்டு இருந்தோம். ஆனால் இந்தச் செய்தி பொய் என்று கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்ச் என்ஜின் நிறுவனமாக விளங்கும் கூகிள்-இல் வேலை செய்ய வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் அனைத்துப் பட்டதாரிகளின் கனவாக இருக்கும்.
சண்டிகர் மாநிலத்தின் செக்டார் 33 பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஹர்ஷித் சர்மா அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் கூகிள் நிறுவனத்தின் பணியாற்ற உள்ளார் என்ற செய்தி பரவியது.
ஊடகங்களில் வெளியான செய்தி
அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கூகிள் நிறுவனத்தில் கிராபிக்ஸ் அணியில் ஹர்ஷித் சர்மா தனது ஒரு வருடப் பயிற்சிக்குப் பின் முழு ஊழியராகப் பணியாற்ற உள்ளார். இவருக்கு மாத சம்பளம் 12 லட்சம் என்று கூறப்பட்டது.
கூகுள் மறுப்பு
ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நிறுவனத்தில் இதுப்போன்று யாரையும் பணிக்கு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பயிற்சியின் போது அவர்க்கு மாதம் 12 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது என்றும் கூகுள் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவித் தொகை
ஆனால் சர்மாவோ ஒரு வருடப் பயிற்சி காலத்தில் 4 லட்சம் ரூபாய் உதவித் தொகையாகக் கூகுள் நிறுவனம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார். இதுவிலும் முரண்பாடாக்க உள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனர்
பள்ளிக் கல்வி இயக்குனர் ரூபின்ஜீத் சிங் பிரார், இந்த விஷயத்தில் ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தனது கருத்தினைப் புதன்கிழமை தெரிவிப்பதாகவும் அறிவித்து இருந்தார்.
பள்ளி முதல்வர்
ஷர்மா படித்த பள்ளி இவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதிலும், பணி நியமன கடிதத்தினைத் தங்கள் பார்க்கவில்லை என்று பள்ளி முதல்வர் இந்திரா பெனிவல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications