குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்கு வரத்துச் சேவையினை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் 11வது ஆண்டு விழாவை ஓட்டி 1,111 ரூபாயில் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் இந்தச் சலுகையால் விமானப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆஃபரில் 2017 ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
சலுகை காலம்
இந்த ஐந்து நாட்களில் டிக்கெட் புக் செய்வதன் மூலம் 2017 ஆகஸ்ட் 21 முதல் 2018 மார்ச் 24 வரை பயணம் செய்யலாம்.
வாடிக்கையாளர்களுக்கு நன்றி!
11 ஆண்டுகள் வரை வெற்றிகரமாக உள்நாட்டு விமானச் சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனம் இந்தச் சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இடங்கள்
இந்தியாவில் பலரின் விருப்பமான விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனம் 1,111 ரூபாய் கட்டணத்தில் 5 நாட்கள் டிக்கெட் புக் செய்து 45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இடங்களுக்குச் சென்று வரலாம்.
பேஸ்புக் பதிவு
மேலும் இண்டிகோ நிறுவனத்தின் பேஸ்புக் பதிவில் மொபிகிவிக் வாலெட் மூலம் டிக்கெட் புக் செய்வதன் மூலம் 11 சதவீத சூப்பர் கேஷ் ஆஃபர் பெற முடியும்.
வழித்தடங்கள்
இண்டிகோ ஆஃபர் மூலமாகக் கோவா, குவாஹாட்டி, ஹைதராபாத், இம்பால், இந்தூர், ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, அகமதாபாத், அகமதாபாத், அம்ரித்ஸர், பாக்தோக்ரா, பாங்காக், பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், டெஹ்ராடூன், தில்லி, திப்ருகர், மும்பை, மஸ்கட், நாக்பூர், பாட்னா, போர்ட் பிளேர், புனே, ராய்பூர், ராஞ்சி, ஷார்ஜா, சிங்கப்பூர், ஸ்ரீநகர், திருவனந்தபுரம், உதய்பூர், வதோதரா, வாரனாசி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம்.
நேரடி விமானங்கள்
இண்டிகோ நிறுவனத்தின் இந்தச் சலுகைகள் மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு இடை விடாமல் எங்கும் நிற்காமல் செல்லாத நேரடி விமானங்களில் மட்டும் டிக்கெட் புக் செய்பவர்களுக்குக் கிடைக்கும்.
குறைந்த டிக்கெட்
1,111 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்கள் கிடைக்கும். இண்டிகோ நிறுவனம் டிக்கெட் எங்கெல்லாம் பெற முடியுமோ அங்கு எல்லாம் இந்தச் சலுகை விலையில் டிக்கெட்களைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications