ஆர்பிஐ வங்கியின் நாணய கொள்க கூட்டத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருக்கின்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமை வகிக்கின்றார். இன்று வெளிவர இருக்கும் அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்திய சில்லறை சந்தையில் சென்ற சில மாதங்களாகப் பண வீக்கம் குறைந்துள்ள நிலையில் மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தினைத் தளர்த்துவதற்கான நம்பிக்கை வெளிப்படுகின்றது. சென்ற ஆண்டில் இருந்த ரெப்போ விகித குறைப்புப் பெரிதாக நடைபெறாத நிலையில் இப்போது அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
புதன்கிழமை ஆர்பிஐ வெளியிடப் போக இருக்கும் நாணய கொள்கை கூட்ட அறிவிப்பில் ரெப்போ விகிதம் 6 சதவீதமாகக் குறையும் என்று 56 பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாக ரீயூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு முக்கிய நபர்கள் ஆர்பிஐ வங்கி 0.5 சதவீதம் வரை ரெப்போ விகிதத்தினைக் குறைக்கும் என்று கூறியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் ஆர்பிஐ வங்கியின் நாணய கொள்கையினைப் புதன்கிழமை இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் வெளியிட உள்ளது.
ஆர்பிஐ வங்கி ரெப்போ விகிதத்தினைக் குறைத்து கடன் மீதான வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்பதற்கான காரணங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பணவீக்கம்
சமீபத்தில் பணவீக்கம் குறைந்து இருப்பது ஆர்பிஐ வங்கியை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே ரெப்போ விகிதம் குறைய வாய்ப்புள்ளது. சாதாரணப் பருவமழை, வீழ்ச்சியடைந்த கச்சா விலைகள், பலவீனமான திறன் பயன்பாடு மற்றும் ஒரு வலுவான நாணயம் ஆகியவை இந்தியாவின் பணவீக்கத்தைப் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
பண மதிப்பு நீக்கம்
பண மதிப்பு நீக்கக் காலத்தில் மக்கள் குறைந்த அளவில் செலவு செய்து வந்தது தற்போது பழைய நிலைக்கு முழுமையாகத் திரும்பியுள்ளது. ஜூன் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம், 5 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்து 1.5 சதவீதமாக உள்ளது.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிலையில் எலக்டிரானிஸ் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரிக்கும் போன்ற காரணத்தினால் மக்கள் முந்தி அடுத்துக் கொண்டு வாங்கியதால் பணவீக்கம் குறைந்துள்ளது எனவும் கூறலாம்.
தொழில்துறை உற்பத்தி தரவு
அதே நேரம் தொழில்துறை உற்பத்தி தரவு 1.7 சதவீதம் வரை மே தாம் குறைந்து இருந்தது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
ரெப்போ விகித குறைப்பு
2016-ம் ஆண்டு அக்டோபர் மாத நாணய கூட்டத்திற்குப் பிறகு ரெப்போ விகிதம் குறைக்கப்படவில்லை. தற்போது ரெப்போ விகிதத்தினை அதிக அளவில் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் கருத்துக்கள் கூறுகின்றன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ 6 வருடத்திற்குப் பிறகு சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இதுவும் ஆர்பிஐ வங்கி ரெப்போ விகத்தத்தினைக் குறைக்கும் என்பதற்கான முன்னோட்டம் தான் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications