ஆர்பிஐ வங்கி கவரனர் உர்ஜித் படேல் தலைமையிலான நாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. அதில் ரெப்போ விகதத்தினை 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக அறிவித்தது.
ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.75 சதவீதமாக ஆர்பிஐ அறிவித்தது. நான்கு நாணய கொள்கை உறுப்பினர்கள் 0.25 சதவீத குறைப்பை ஆதரித்துள்ளனர்.
உறுப்பினர்கள் ஆதரவு முழு விவரம்
நாணய கொள்கை கூட்டத்தில் உறுப்பினர்களாக இருந்த 6 நபர்களில் பேராசிரியர்கள் டாக்டர் சேத்தன் காட், டாக்டர் பாமி துவா, டாக்டர் வைரல் வி ஆச்சார்யா மற்றும் டாக்டர். உர்ஜீத் ஆர்.படேல் ஆகியோ 0.25 சதவீத ரேப்போ விகித குறைப்பிற்கும், நேரத்தில் டாக்டர் ரவீந்திர ஹெச் மற்றும் டாக்டர் மைக்கேல் டெபப்ரதா பாட்டா இருவரும் 0.50 சதவீத குறைப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கூட்டப்பட்ட மொத்த மதிப்பு
கூட்டப்பட்ட மொத்த மதிப்பு 2017-2018 நிதி ஆண்டில் எதிர் பார்த்த 7.3 சதவீத எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்துள்ளது.
பணவீக்கம்
சில்லறை வணிகம் மீதான பணவீக்கம் ஆர்பிஐ எதிர்பார்த்த 2 முதல் 3.5 சதவீதத்தினை விடக் குறைந்து 1.54 சதவீதமாக ஜூன் மாதம் குறைந்து இருந்தது.
சில்லறை சந்தையில் சென்ற சில மாதங்களாகப் பண வீக்கம் குறைந்துள்ள நிலையில் மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தினைத் தளர்த்துவதற்கான நம்பிக்கை இருந்தது வந்தது.
வல்லுனர்கள் எதிர்பார்ப்பு
புதன்கிழமை ஆர்பிஐ வெளியிடப் போக இருக்கும் நாணய கொள்கை கூட்ட அறிவிப்பில் ரெப்போ விகிதம் 6 சதவீதமாகக் குறையும் என்று 56 பொருளாதார வல்லுனர்கள் கூறிவந்தனர்.
கடன் மீதான வட்டி
ஆர்பிஐ வங்கி ரெப்போ விகிதத்தினைக் குறைத்துள்ளதால் வீடு கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.
பங்குச் சந்தை
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் காலை முதல் சரிவில் இருந்த பங்குச் சந்தை குறியீடுகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெப்போ விகித குறைப்பு
சென்ற ஆண்டில் இருந்த ரெப்போ விகித குறைப்புப் பெரிதாக நடைபெறாத நிலையில் இப்போது அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதற்கு ஏற்றவாறு ரெப்போ விகிதத்தினை ஆர்பிஐ குறைத்து உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications