பதஞ்சலி நிறுவனம் 2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. 2014-2015 நிதி ஆண்டை விட இது 5 மடங்குகள் அதிகம். தற்போது ஆடை அணிகலன்கள் துறையில் நுழைந்து அதிலும் 5,000 கோடி ரூபாய்க் கூடுதலாகப் பெறுவதற்கு இலக்கை வைத்துள்ளது..
அது மட்டும் இல்லாமல் 2017-2018 நிதி ஆண்டில் 20,000 கோடி ரூபாய் முதல் 25,000 கோடி ரூபாய்ப் பெறுவதற்கு இலக்கை வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 2010-ம் ஆண்டு முதல் பதஞ்சலி நிறுவனம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகின்றது என்று இங்குப் பார்ப்போம்.
2010-2011
பதஞ்சலி நிறுவனம் 2010-2011 நிதி ஆண்டில் 317 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது.
2011-2012
இதுவே 2011-2012 நிதி ஆண்டில் கூடுதலாக லாபம் அடைந்து 453 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது.
2012-2013
2012-2013 நிதி ஆண்டில் அதற்கு முந்தைய நிதி ஆண்டை விட இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்து பதஞ்சலி நிறுவனம் 841 கோடி வருவாயினைப் பெற்றது.
2013-2014
2013-2014 நிதி ஆண்டில் முதன் முறையாக 1,000 கோடி ரூபாயினைக் கடந்து 1,184 கோடி ரூபாய் லாபத்தினைப் பெற்றுள்ளது.
2014-2015
பதஞ்சலி நிறுவனம் 2014-2015ம் ஆண்டு நிதி ஆண்டில் 1,000 கோடியில் இருந்து தாண்டி 2,006 கோடி ரூபாய் லாபத்தினைப் பெற்றுள்ளது.
2015-2016
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பாபா ராம்தேவ் அவர்களின் வளர்ச்சி அசுர வேஃபத்தில் வளர்ந்து வருகின்றது என்பதைப் பார்க்க முடிகின்றது. 2016-2016 நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயினைப் பெற்று பதஞ்சலி நிறுவனம் 5,000 கோடி ரூபாய் வருவாயினைப் பதிவு செய்துள்ளது.
2016-2017
பதஞ்சலி நிறுவனம் 2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. 2014-2015 நிதி ஆண்டை விட இது 5 மடங்குகள் அதிகம்.
2017-2018
2017-2018-ம் நிதி ஆண்டில் தனது நிறுவனத்தின் வருவாய் இலக்கினை 20,000 கோடி ரூபாய் முதல் 25,000 கோடி ரூபாயாகப் பதஞ்சலி வைத்துள்ளது. இதற்காகப் பல புதிய துறைகளில் தங்களது ஆதிகத்தினைச் செலுத்தவும் முடிவு செய்து பல அறிவிப்புகளைப் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications