ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் சேவை மூலமாக ரயில் டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தினை நிதானமாகச் செலுத்தலாம் என்று இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது வரை இந்தச் சேவை பொதுப் பிரிவு ரயில் டிக்கெட் புக் செய்யம் போது மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றது. தட்கல் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் டிக்கெட் உறுதி செய்யும் முன்பே கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது அந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் முறை
தட்கல் டிக்கெட்களுக்கு ஐஆர்சிடிசி பயனர்கள் பணம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் உதவியுடன் டிக்கெட் புக் செய்து டோர் டெலிவரியும் பெறலாம் என ஐஆர்சிடிசி கொடுப்பனவு வழங்குநரான ஆண்ட்ரூல் டெக்னாலஜிஸ் கூறியுள்ளது.
எத்தனை தட்கல் டிக்கெட் புக் செய்யப்படுகின்றது?
ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகத் தினமும் 1,30,000 தட்கல் டிக்கெட் புக் செய்யப்படுகின்றது. இந்தச் சேவையில் அளிக்கப்படும் டிக்கெட்கள் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிடும்.
பரிவர்த்தனை தோல்விகள் குறையும்
இந்தப் புதிய முறையினால் பரிவர்த்தனை தோல்விகள் அதனால் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டணம், அதற்காக எடுத்துக்கொள்ளப்படும் 15 நாட்கள் காலக்கெடுவெல்லாம் குறையும்.
டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பிறகு கட்டணம்
ஐஆர்சிடிசி வழங்கும் இந்தச் சேவையினைப் பயன்படுத்தி டிக்கெட் புக் செய்துவிட்டு டிக்கெடினை உறுதி செய்துகொண்டும் பேமெண்ட் கேட்வே மூலமாக அல்லது டோர் டெலிவரி பெறும் போதும் கட்டணத்தினைச் செலுத்தலாம்.


Click it and Unblock the Notifications