இந்திய மென்பொருள் சந்தையில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் டெக் மஹிந்திரா நிறுவனம், தனது மோசமான வர்த்தக மற்றும் வருவாய் நிலையில் காரணமாக 6 வருடம் அதிக அனுபவம் கொண்ட அதிகாரிகளும், உயர் மட்ட நிர்வாகத்தில் இருக்கும் அனைவரும் இந்த வருடம் சம்பள உயர்வு கிடையாது என அறிவித்தது நாம் மறந்திருக்க முடியாது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இந்த ஒட்டுமொத்த சுமையை உயர் மட்ட நிர்வாகிகள் தலையில் தற்போது விழுகிறது.
20% சம்பளம்
டெக் மாஹிந்திரா நிறுவனத்தில் இருக்கும் நிர்வாகத் துணை தலைவர்கள், உயர் துணை தலைவர்கள், நிறுவனத்தின் மோசமான நிலையை உணர்ந்து இந்த வருடம் சுமார் 20 சதவீதம் வரையிலான குறைவான சம்பளத்தைப் பெற முடிவு செய்துள்ளனர்.
அதாவது, கடந்த வருடம் இவர்கள் வாங்கிய சம்பளத்தை விட 20 சதவீதம் குறைவான சம்பளம் பெற முடிவு செய்துள்ளனர்.
20 அதிகாரிகள்
கடந்த சில காலாண்டுகளாக நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 20க்கும் மேற்பட்ட நிர்வாகத் துணை தலைவர்கள், உயர் துணை தலைவர்கள் 10-20 சதவீதம் வரையிலான குறைவான சம்பளத்தைப் பெற விருப்பம் தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல்
இதற்கான விருப்ப ஒப்புதலை டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிபி குருநானி மற்றும் தலைமை மக்கள் அதிகாரி ராகேஷ் சோனி ஆகியோருக்கு இந்த 20 அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
உடனடி நடவடிக்கை
மின்னஞ்சலில் இதனை உடனடியாகச் செயல்படுத்தவும் இந்த 20 அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட நிர்வாகம், இவர்களின் செயலை பாராட்டியது. மேலும் நிறுவனத்தின் நிலை சீரடைந்த உடன், இவர்களின் சம்பளம் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெக் மஹிந்திரா
சில மாதங்களுக்கு முன்பு தனது 500 நிர்வாக அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வு கிடையாது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு
உயர் நிர்வாக அதிகாரிகளின் இந்த முடிவால், டெக் மஹிந்திரா ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல 6 வருடங்களுக்கு அதிக அனுபவம் கொண்ட உயர் அதிகாரிகளுக்கு இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு கிடைக்கலாம்.
பிற நிறுவனங்கள்
டெக் மஹிந்திராவை தொடர்ந்து இன்போசிஸ், காக்னிசென்ட், நிறுவனங்கள் சம்பளம் குறைப்பு, சம்பளம் உயர்வு ரத்து, காலத் தாமதம் ஆகிய பலவற்றை அறிவித்தது.
More From GoodReturns

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications