என்ன தான் ஆதார் கார்டு வந்தாலும் இந்த நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம்!

பான் கார்டை விட ஆதார் கார்டு பல திட்டங்களுக்கு முக்கியத்துவம் பெறப்பட்டு வரும் நிலையில் பான் கார்டு பல திட்டங்களுக்கு முக்கியமாகத் தேவை என்பது பலருக்கு தெரிவதில்லை. 10 இலக்க எண்ணான பான் கார்டு வருமான வரித் துறையினரால் நிதி பரிமாற்றங்களுக்காக வழங்கப்படுவது ஆகும்.

ஆதார் கார்டு என்பது முன்னிலை பெற்று வந்தாலும் வருமான வரித் துறை அளிக்கும் பான் கார்டு என்பது வங்கி கணக்கு, பணத்தினை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது, டிமேட் கணக்கு, அசையாச் சொத்துப் பரிவர்த்தனை செய்தல், பத்திரங்களில் கையாளுதல், மற்றம் பிற நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்குப் பான் எண்ணைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

மோட்டார் வாகனங்கள்

மோட்டார் வாகனங்கள்

இரண்டு சக்கர வாகனம் இல்லாத மோட்டார் வாகனங்களை வங்கும் போது அல்லது விற்கும் போது பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

வங்கி கணக்கை திறக்கும் போது பணத்தை டெபாசிட் செய்கின்றோமோ இல்லையோ வங்கி அல்லது நிதி நிறுவனத்துடன் ஆவணமாகச் சமர்ப்பிப்பது நல்லது.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பான் கார்டு குறிப்பிட வேண்டாம்.

டிமேட் கணக்கு

டிமேட் கணக்கு

செபியின் கீழ் பங்கு சந்தையில் முதலீடு செய்ய டெபாசிட் செய்ய, டிமேட் கணக்கை திறக்க பான் கார்டு அவசியம்.

ரொக்க பணப் பரிவர்த்தனை

ரொக்க பணப் பரிவர்த்தனை

வங்கி கணக்கில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக ரொக்க பணத்தினை டெபாசிட் செய்யும் போது, தங்கும் விடுதி அல்லது உணவகங்களில் கட்டணம் செலுத்தும் போது பான் கட்டாயம்.

வெளிநாட்டுப் பயணம்

வெளிநாட்டுப் பயணம்

வெளிநாட்டிற்குப் பயணம் செய்யும் போது அல்லது வெளிநாட்டு கரன்சியை ஒரே நேரத்தில் வங்கும் போது 50,000 ரூபாய் மதிப்பை விட அதிகமாகச் செல்லும் போது பான் எண் சமர்ப்பிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு போன்ற திட்டங்களில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் போது பான் கார்டு அளிக்க வேண்டும்.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

50,000 ரூபாய்க்கும் அதிகமாக நிறுவனம் அல்லது கல்வி நிலையம் போன்றவற்றுக்குக் கட்டணமாகச் செலுத்தும் போது பான் எண் கட்டாயம்.

 பத்திரங்கள்

பத்திரங்கள்

இந்திய ரிசர்வ் வங்கியில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாகப் பத்திரங்கள் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பான் கட்டாயம்.

தங்கம் வாங்குதல்

தங்கம் வாங்குதல்

50,000 ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கம் வாங்கும் போது பான் எண் சமர்ப்பிக்க வேண்டும்.

சொத்து

சொத்து

10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக விலை கொடுத்டு சொத்து வாங்கும் போது பான் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை

சரக்கு மற்றும் சேவை

ஏதேனும் பொருட்கள் அல்லது சேவையினைப் பெறும் போது 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கொடுத்து பெறுகின்றீர்கள் என்றால் பான் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

பான் எண் இல்லாதவர்கள்

பான் எண் இல்லாதவர்கள்

ஒருவரிடம் பான் எண் இல்லாத போது மேலே கூறிய பரிவர்த்தனைகள் எல்லாம் செய்ய வேண்டும் என்றால் படிவம் 60-ஐ பூர்த்திச் செய்து அளிக்க வேண்டும்.

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

உங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு வருமான வரி செலுத்த கூடிய அளவிற்கு வருவாய் இல்லாத போது பான் எண் தேவைப்படும் போது மைனரின் உங்கள் பான் எண்ணைச் சமர்ப்பிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+