இந்திய ரயில்களில் பயணம் செய்யும் போது பதுவு செய்த மற்றும் பதிவு செய்யாத டிக்கெட் இரண்டையும் கடை நேரச் சிக்கல், அல்லது ரயிலை தவறவிட்ட பிற காரணங்களுக்காக ரத்துச் செய்யலாம். அப்படி ரத்து செய்யும் டிக்கெட்களை வைத்து இந்தியன் ரயில்வேஸ் 2016-2017 நிதி ஆண்டில் 1,400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக நவம்பர் 2015-ம் தேதி முதல் டிக்கெட் ரத்துச் செய்வதற்கான கட்டணத்தினை இரட்டிப்பு ஆக்கியது என்று கூறப்படுகின்றது. எனவே இதன் இன்னும் பிற காரணங்களை இங்குப் பார்ப்போம்.
25 சதவீத உயர்வு
2015-2016 நிதி ஆண்டில் டிக்கெட் ரத்து செய்தல் மூலம் பெற்ற வருவாயினை வைத்துப் பார்க்கும் 2016-2017 நிதி ஆண்டில் 25 சதவீத வருவாயினைக் கூடுதலாக இந்தியன் ரயில்வேஸ் பெற்றுள்ளதாக மாநிலங்களவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் ராஜே கோஹெயின் கூறினார்.
நிபந்தனைகள் பொருந்தும்
ரயில்வே பயணிகள் (டிக்கெட் ரத்து மற்றும் கட்டணத்தைத் திரும்பப்பெறுதல்) விதிமுறைகளின் படி டிக்கட்களை ரத்துச் செய்வதற்கான கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. கட்டணம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிகள் உட்பட்டு வழங்கப்படும். "இருப்பினும், விதிகள் கீழ் மீட்க முடியாத தள்ளுபடி கட்டணங்களைத் திரும்ப வழங்குவதற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லை" என்று கோஹெயின் கூறினார்.
தென் மத்திய ரயில்வே
தென் மத்திய ரயில்வே பிரிவில் இருந்து மட்டும் 2016-2017 நிதி ஆண்டில் 103.27 கோடி வரை ரத்து மற்றும் கட்டணங்களாக வருவாய் கிடைத்துள்ளது.
ஏசி டிக்கெட் ரத்துக் கட்டணங்கள்
நவம்பர் 2015-க்கு பிறகு ஏசி-3 டையர் டிக்கெட் ரத்துக் கட்டணம் ரயில் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன்பு செய்யும் போது 90 ரூபாயாக இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே ஏசி-2 டையர் ரத்துக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்
ஸ்லீப்பர் வகுப்பு ரயில் டிக்கெட் ரத்து செய்யும் போது 60 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே இரண்டாம் வகுப்பு டிக்கெட்டிற்கு 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்கள் ரயில் புறப்படும் நேரம் குறையும் போது மேலும் அதிகரிக்கும்.
புதிய விதி
புதிய விதி அமலுக்கு வந்த பிறகு ரயில் புறப்பட்ட பிறகு டிக்கெட் ரத்து செய்யும் போது எந்தக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படமாட்டாது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications