புதிய பொருட்களை, தொழில்நுட்பத்தை தயாரிப்பதில் மட்டுமல்ல பணத்தை சம்பாதிப்பத்திலும் அமெரிக்காவின் சிலிக்கான வேலி நிறுவனங்களுக்கு தனிப்பட்ட திறமை உண்டு.
இதில் நிறுவனங்களுக்கு மத்தியில் இருக்கும் வித்தியாசம் தான் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை உயர்த்தி காட்டுகிறது. இந்த வகையில் கூகிள் நிறுவனத்தை விட பேஸ்புக் செம கெத்து.
ஊழியர்கள்
ஒரு நிறுவனம் பெறும் வருமானம் மற்றும் லாபத்தை ஊழியர்களின் பங்கீடு செய்வது வல்லரசு நாடுகளில் பல ஆண்டுகளாக நடைமுறையில், இந்தியாவில் கூட மென்பொருள் துறையில் பல வருடங்களாக கணக்கிட்டு ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுத்தி வருகிறது.
பேஸ்புக்
ஜூன் காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தில் புதிதாக 20,658 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது, இதன் மூலம் இந்நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 43 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
$188,498
இந்நிலையில் ஜூன் காலாண்டு முடிவுகளில் லாபத்தை ஊழியர்கள் மத்தியில் பங்கீடு செய்யும் போது ஒரு ஊழியருக்கு 1,88,498 டாலர் பெற்றுள்ளது.
கூகிள்
இதே கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தில் ஒரு ஊழியருக்கு வெறும் 46,610 டாலராக உள்ளது.
இது பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனங்கள் மத்தியில் 4 மடங்கு வித்தியாசமாக உள்ளது. இதன் மூலம் பணம் சம்பாதிப்பதில் பேஸ்புக் பெரிய தலையாக இருக்கிறது.
டிவிட்டர்
சமுக வலைதளத்தில் பேஸ்புக் உடன் போட்டி போடும் டிவிட்டர் நிறுவனத்தில் ஒரு ஊழியருக்கு 36,000 டாலர் நஷ்டத்தை பெற்றுள்ளது.
பிற நிறுவனங்கள்
ஜூன் காலாண்டில் அமெரிக்க சிலிக்கான் வேலி நிறுவனங்கள் பெற்றுள்ள வருவாய் மற்றும் மொத்த வருமானம்.


Click it and Unblock the Notifications