உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் விஸ்தரா நிறுவனம் எகானமி வகுப்பு பயண டிக்கெட்களை 799 ரூபாய் முதலும் பிரீமியம் வகுப்பு டிக்கெட் கட்டணங்களை 2,099 ரூபாய் முதலும் அறிவித்துள்ளது.
அதே நேரம் ஏர் ஏசியா நிறுவனம் 2,000 ரூபாய்க்கும் குறைவாகச் சில வழித்தடங்களில் விமான டிக்கெட் கட்டணங்களைக் குறைத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இரண்டு புதிய வழித்தடங்களில் விமானச் சேவையினை அளிக்க உள்ளது.
விஸ்த்ரா நிறுவன சலுகை காலம்
விஸ்தரா நிறுவனத்தில் ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 என இரண்டு நாட்களில் விமானங்களை இந்தச் சலுகை விலையில் புக் செய்து 2017 ஆகஸ்ட் 23 முதல் 2018 ஏப்ரல் 19-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
வழித்தடங்கள் மற்றும் கட்டணங்கள்
விஸ்த்ரா நிறுவனம் வழங்கும் எகானமி மற்றும் பிரீமியம் எகானமி டிக்கெட் கட்டணத்தின் முழுப் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
| வழித்தடங்கள் | எகானமி | பிரீமியம் எகானமி |
|---|---|---|
| Jammu-Srinagar | 799/- | 2,099 |
| Delhi-Amritsar | 1,199/- | 2,799 |
| Guwahati-Bagdogra | 1,199/- | 2,099 |
| Delhi-Chandigarh | 1,299/- | 2,599 |
| Delhi-Lucknow | 1,399/- | 2,649 |
| Delhi-Srinagar | 1,499/- | 3,299 |
| Delhi-Ahmedabad | 1,499/- | 3,499 |
| Delhi-Mumbai | 2,099/- | 4,099 |
| Delhi-Pune | 2,099/- | 4,199 |
| Delhi-Kolkata | 2,199/- | 4,699 |
| Bagdogra-Delhi | 2,399/- | 4,499 |
| Delhi-Hyderabad | 2,399/- | 4,199 |
| Delhi-Bhubaneswar | 2,399/- | 4,599 |
| Port Blair-Kolkata | 2,999/- | 5,199 |
| Pune-Kolkata | 2,499/- | 5,399 |
| Delhi-Bengaluru | 2,599/- | 5,199 |
| Mumbai-Amritsar | 2,699/- | 4,999 |
| Delhi-Goa | 2,799/- | 4,999 |
| Delhi-Leh | 2,899/- | 4,199 |
| Delhi-Guwahati | 2,999/- | 4,999 |
| Delhi-Kochi | 3,299/- | 5,499 |
| Delhi-Port Blair | 5,099/- | 7,599 |
ஏர் ஏசியா சலுகை விலை
குறைந்த காலத்திற்குப் பல வழித்தடங்களில் 2,000 ரூபாய்க்கும் குறைவாக ஏர் ஏசியா நிறுவனம் டிக்கெட் கட்டணங்களை அறிவித்துள்ளது.
வழித்தடங்கள்
பெங்களுரில் இருந்து ஹைதராபாத் செல்ல 1,198 ரூபாயில் ஜிஎஸ்டி உட்பட்ட கட்டணத்தில் பயணம் செய்யலாம். ஹைதராபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 1,999 ரூபாய்க் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications