மத்திய அரசின் அதிரடி சோதனையில் இந்தியாவில் இருக்கும் போலியான பான் கார்டு எண்களை எப்போதுமில்லாத வகையிய் அதிகளவில் முடக்கியுள்ளது.
வரி ஏய்ப்புக்கு முதல் காரணமாக இருக்கும் போலி பான் கார்டு முடக்கும் முயற்சியாக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இதன் நடவடிக்கையின் எதிரொலியாகச் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான பான் கார்டுகளை முடக்கியுள்ளது.

ஜூலை 27ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் மத்திய அரசு சுமார் 11,44,211 போலி பான் எண்களை முடங்கியுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் அதிகளவிலான வரி ஏய்ப்பைத் தடுக்க முடிவது மட்டும் அல்லாமல் முடக்கப்பட்ட ஆசாமிகளின் வருமானத்தைக் கணக்கில் காட்ட வேண்டிய நிலைக்கு மத்திய அரசு அவர்களைத் தள்ளியுள்ளது.
அரசின் விதிகள் படி ஒருவர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், விரி ஏய்ப்பு செய்வதற்காக மோசடி ஆசாமிகள் ஓரு நபரே பல பான் கார்டுகளை வைத்து ஏமாற்றி வருகின்றனர்.
மேலும் முடக்கப்பட்ட பான் கார்டுகளில் பல போலியான விபரங்கள் கொடுத்து பெறப்பட்டவை எனத் தகவல் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications