இந்திய நுகர்வோர் சந்தையைக் கலக்கி வரும் பதஞ்சலி நிறுவனம், தனது உற்பத்தி மற்றும் புதிய பொருட்களைச் சந்தைப்படுத்தவதற்காகவும் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது பாபா தலைமையிலான பதஞ்சலி நிறுவனம்
ஏற்கனவே பதஞ்சலியின் வர்த்தக ஆதிக்கத்தின் காரணமாக, பல முன்னணி நுகர்வோர் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், இந்த 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை மொத்த சந்தையையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பதஞ்சலி.
வங்கி
ஏற்கனவே பதஞ்சலி பங்குச்சந்தையில் இறங்க உள்ளதாகத் திட்டமிட்டு இருந்த நிலையில், வர்த்தகச் சந்தையில் இந்த நிதி திரட்டும் அறிவிப்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போதைய தேவையான 1,000 கோடி ரூபாய் நிதியை வங்கிகளின் கடனாகப் பெறத் திட்டமிட்டுள்ளதாகப் பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.திஜர்வாலா தெரிவித்துள்ளார்.
உற்பத்தி
இந்த வருட இறுதிக்குள் பதஞ்சலி நிறுவனத்தில் தன்காட்டி டூத்பேஸ்ட் மற்றும் கேஷ்காந்தி ஷாப்புத் தயாரிப்பு அளவு 50,000 கோடி அளவை எட்டும் நிலையில், அடுத்த 3 வருடத்தில் இதன் உற்பத்தி அளவை 3 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது பதஞ்சலி.
50 ஆலைகள்
தற்போதைய நிலையில் பதஞ்சலி நிறுவனம் சுமார் 50 உற்பத்தி ஆலைகளை இந்தியா முழுவதும் வைத்துள்ளது.
விரிவாக்கம்
தற்போது திரட்டப்படும் முதலீட்டின் மூலம் மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரா பிரதேசம், மத்திய பிரதேசம், நொய்டா, உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருக்கும் உற்பத்தி ஆலைகளை விரிவாக்கம் செய்யவும் உற்பத்தி அளவை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம்.
ஐடிசி
இந்திய எப்எம்ஜிசி துறையில் ஐடிசி நிறுவனத்தை 3வது இடத்திற்குத் தள்ளிவிட்டு பதஞ்சலி 10,500 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது பதஞ்சலி.
முக்கியப் பிரிவுகள்
இதுவரை பதஞ்சலி நெய், டூத்பேஸ்ட், ஆயுர்வேத மருந்துகள், ஷாப்பு, சோப்பு, பிஸ்கேட் மற்றும் சில உணவுப் பொருட்கள் பிரிவுகளில் மட்டுமே இருந்து வரும் நிலையில் இப்புதிய முதலீட்டின் மூலம் புதிய வர்த்தகப் பிரிவில் இறங்க உள்ளது பதஞ்சலி.
புதிய துறை..
பதஞ்சலி நிறுவன புதிய வர்த்தக வாய்ப்புகளைத் தேடி வரும் நிலையில், ஆடை தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2018ஆம் ஆண்டுக் கோடைக்காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளைச் சந்தைப்படுத்த உள்ளது.
செக்யூரிட்டி
பதஞ்சலி நிறுவனம் ஏற்கனவே எப்எம்ஜிசி துறையைத் தாண்டி செக்யூரிட்டி துறையில் இறங்கியுள்ள நிலையில் ஆடை தயாரிப்புத் தற்போது புதிதாக இறங்க முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் உள்ள பதஞ்சலியின் 11 லட்ச யோகா சென்டரில் இந்தச் செக்யூரிட்டி ஆட்கள் பணியாற்றி வருகின்றனர்.
அசுர வளர்ச்சி
அடுத்த அம்பானி
ஆச்சர்யா பாலகிருஷ்னா
மலையாளி
'சபாஷ் சரியான போட்டி'..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications