ஜியோ-வில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. 10வது முதல் எம்பிஏ பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1,900 நபர்களை விற்பனை மற்றும் விநியோகம் பிரிவில் பணிக்கு எடுக்க இருக்கின்றது. இது குறித்த முழு விவரங்களையும் ஜியோ.காம் என்ற இணையத் தளத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விற்பனைப் பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல், கோரிக்கை உருவாக்கம், விற்பனை செலவு மற்றும் வரவு செலவுத் திட்டம், விற்பனை மண்டலங்களை நிறுவுதல் மற்றும் விற்பனை ஒருங்கிணைப்பு போன்ற பணிகளுக்கான அறிவிப்பாக இது உள்ளது.

விரிவுபடுத்த மற்றும் வலுப்படுத்த நினைக்கும் ஜியோ
 

விரிவுபடுத்த மற்றும் வலுப்படுத்த நினைக்கும் ஜியோ

ஜியோ நிறுவனம் தனது சேவையினை விரிவுபடுத்த மற்றும் வலுப்படுத்த நினைக்கின்றது என்று சில வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஜீயோ வலைத்தளத்தின் படி, நாடு முழுவதும் பல இடங்களில், தில்லி, கொல்கத்தா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உட்படப் பல மாநிலங்களில் இந்தப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றது.

பழுதுபார்க்கும் வல்லுநர்

பழுதுபார்க்கும் வல்லுநர்

டிஜிட்டல் பழுதுபார்க்கும் வல்லுனர் போன்ற பணிகளுக்கு 10 வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, சாதன பழுது பார்க்கும் படிப்பில் சான்றிதழ் பெற்றவர்கள் 0 முதல் 4 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதே நேரம் இவர்களுக்கு வாடிக்கையாளர் கவனம், நல்ல தகவல் தொடர்பு திறன், சிக்கல் தீர்க்கும் திறம் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றிய அறிவு இருத்தல் வேண்டும்.

விற்பனை மற்றும் விநியோகம்

விற்பனை மற்றும் விநியோகம்

மொபைல் போன் விற்பனை பிரிவில் ஜியோ நிறுவனம் விற்பனை மற்றும் விநியோகம் விரிவாக்கத்தின் மீது அழுத்தம் மற்றும் புத்திசாலி தனமாகச் செயல்பட்டு விற்பனையினை அதிகரித்தல் போன்றவற்றுடன் 5 முதல் 7 வருடங்கள் வலை அனுபவம் உள்ளவர்கள் பணிக்கு வேண்டும் என்று கேட்டுள்ளது.

எம்பிஏ
 

எம்பிஏ

மேலும் ஜியோ நிறுவனம் எம்பிஏ படித்தவர்களுக்கு மொபைல் போன் விற்பனை பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர் சேவை குழு பணியில் சேர விரும்ப்புபர்கள் வாடிக்கையாளர்களின் சிக்கலை அறிந்து அதனைத் தீர்த்து உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

120 நபர்களை வாடிக்கையாளர் சேவை குழுவிற்குப் பணிக்கு எடுக்க இருப்பதாக இணையத்தில் ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவு

விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவு

விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவில் உதவி மேலாளர்கள், டிஜிட்டல் விற்பனை நிபுணர்கள், டிஜிட்டல் பழுது நிபுணர்கள், வாடிக்கையாளர்களை நிர்வகிக்கும் மேலாளர்கள் மற்றும் வீட்டிற்கு இணைப்பை அளிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிகள் இருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளது.

ஜியோ போன்

ஜியோ போன்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் சென்ற மாதம் வெளியிட்ட அறிவிப்பில் விலை இல்லா 50 ஆயிரம் ஜியோ போன்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அதனைச் சமாளிக்கவே இந்த வேலை வாய்ப்புகள் அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தரவு திட்டம்

தரவு திட்டம்

இதற்கிடையில், ஜியோவின் தீவிரமான தரவுத் திட்டம் டெலிகாம் துறையில் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது பெரும் போட்டிக்கு வழிவகுத்திருக்கின்றன.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஜியோ நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க இங்கு அளிக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio Recruitment: Latest Jobs For Freshers To MBAs

Reliance Jio Recruitment: Latest Jobs For Freshers To MBAs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X