நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா 2016-17 நிதியாண்டில் சுமார் 7.67 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இது முந்தை வருடத்தை விடவும் சுமார் 16.38 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளத்தை ஒப்பிடுகையில் ஆனந்த் மஹிந்திரா சம்பள வித்தியாச விகிதம் 108:27 ஆக உள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் தலைமையிலான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் தற்போது ஆட்டோமொபைல் துறையில் மட்டுமல்லாமல், வங்கி, மென்பொருள், ஆயுத உற்பத்தி, ராணுவ வாகனங்கள் தயாரிப்பு என பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
பவன் கோங்கா
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா 7.67 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் போது, இந்நிறுவனத்தின் நிர்வாக தலைவராக இருக்கும் பவன் கோங்கா மிகவும் குறைந்த வித்தியாசத்தில் 7.39 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
பவன் கோங்காவின் சம்மபளம் கடந்த நிதியாண்டைவிடவும் 15.86 சதவீதம் அதிகமாக உள்ளது.
விஎஸ் பார்த்தசாரதி
மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி மற்றும் தலைமை தகவல் அதிகாரியாக இருக்கும் விஎஸ் பார்த்தசாரதி 2016-17ஆம் நிதியாண்டில் 3.52 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
சம்பளம் குறைவு..
2016-17ஆம் ஆண்டு பல்வேறு காரணத்திற்காக நிர்வாக பணிகளில் இல்லாத அதிகாரிகளின் சம்பளம் 1.46 சதவீதமும், நிர்வாக பணியில் இருப்பவர்களின் சம்பளத்தை 7.35 சதவீதம் வரை குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications