500, 1000 ரூபாய் நீக்கத்திற்கு பின் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 25% அதிகரிப்பு..!

வருமான வரித் துறையின் வருவாய் 2016-17 ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்து 2.82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தனி நபர்கள் வரி செலுத்தியதன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வது 25.3 சதவீதம் உயர்ந்து 2.79 கோடி வருவாயினை அளித்துள்ளது என்றும் இது ஆகஸ்ட் 5-ம் தேதி வரையிலான கணக்கு என்றும் 2.22 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஆப்ரேஷன் க்ளீன் மணி

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஆப்ரேஷன் க்ளீன் மணி

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஆப்ரேஷன் க்ளீன் மணி போன்ற நடவடிக்கைகள் எடுத்த பிறகு வருமான வரி தாக்கல் அதிகம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகின்றது.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல்

2016-2017 நிதி ஆண்டில் 2.26 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்து இருந்தனர். இதுவே இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 2.82 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

வரி தாக்கல் செய்தவர்களின் வளர்ச்சி விகிதம்

வரி தாக்கல் செய்தவர்களின் வளர்ச்சி விகிதம்

சென்ற ஆண்டு 9.9 சதவீதமாக இருந்த வருமான வரி தாக்கல் செய்தவர்களின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 24.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தனி நபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் வருமான வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி ஆகஸ்ட் 5 தேதி ஆகும்.

 

 புதியவர்கள்

புதியவர்கள்

வருமான வரி தாக்கல் செய்ததில் பலர் புதியவர்கள் என்றும் இது பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கொண்டு வரப்பட்ட மாற்றம் எனவும் நிதி அமைச்சக வட்டாரம் கூறியுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தாக்கம் நேரடி வரி செலுத்திய எண்ணிக்கையில் கண்கூடாகத் தெரிகின்றது என்றும் கூறப்படுகின்றது.

2016-2017 நிதி ஆண்டுடன் ஒப்பீடு

2016-2017 நிதி ஆண்டுடன் ஒப்பீடு

2016-2017 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முன்கூடிய வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 41.79 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், தனிநபர்கள் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 34.25 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் உறுதிப்பாடு

அரசாங்கத்தின் உறுதிப்பாடு

"கருப்புப் பணத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராட அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் நேர்மறையான விளைவுகளை மேலே குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன," என்று அரசு தரப்பு மேலும் கூறியது.

கருப்புப் பணம்

கருப்புப் பணம்

கருப்புப் பணத்தின் அச்சுறுத்தலை எதிர்த்து 2016 நவபர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை நீக்கி வங்கியில் பணத்தினை டெப்பாசிட் செய்ய வலியுறுத்தியது. வருமான வரித் துறை கணக்கில் வராத பணத்தினை வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படுகின்றதா என்பதைக் கண்காணித்துக் கண்டறிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+