வீட்டை விட்டு ஓடிய 16 வயது சிறுவனின் போராட்டங்களும்.. வெற்றியும்..!

கோயம்புத்தூர்: இந்த உலகமும், வாழ்க்கையும் பல வகையில் மாறியிருந்தாலும் கனவிற்காகவும், வாழ்வை வென்றிடவும் இளைஞர்கள் வீட்டை விட்டு ஓடுவது என்பது அன்று முதல் இன்று வரை மாறாமல் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு இளைஞன் தான் ராஜா.

1979 ஆம் ஆண்டு வெறும் 16 வயதான ராஜா, வீட்டை விட்டு வெளியேறும்போது அவரிடம் இருந்தது 25 ரூபாயும், மன முழுவதும் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கை தான்.

தஞ்சம் அடைந்த முதல் இடம்..

தஞ்சம் அடைந்த முதல் இடம்..

தேவக்கோட்டை அருகில் இருக்கும் கோவிந்தமங்களம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா வீட்டை விட்டு வெளியேறும்போது தன்னுடன் இரு நண்பர்களுடன் உடன், தனது சொந்த ஊரை விட்டுக் கிளம்பி கோயம்புத்தூர்-க்கு சென்றனர்.

கையில் வைத்திருந்த 25 ரூபாயில் 11 ரூபாய் பஸ் டிக்கெட் வாங்கியுள்ளனர் இந்த 3 சிறுவர்கள், கோயம்புத்தூரில் தெரிந்த ஒரே நபர் தனது சொந்த ஊர்க்காரர் ஒருவர் கோயம்புத்தூரில் கான்ஸ்டபில் ஆக இருக்கிறார். அவரைத் தேடிப்படித்து (நடந்து) 3 சிறுவர்களும் அவரிடம் சேர்ந்தனர்.

 

முதல் வேலை

முதல் வேலை

தேவக்கோட்டையில் இருந்து கோயம்புத்தூர் வந்த ராஜா, மாத சம்பளத்திற்கு ஒரு ஹோட்டலில் சப்ளையாகச் சேர்ந்தார். இதுவே ராஜாவின் செய்த முதல் வேலையாக இருந்தது. மாதம் சம்பளம் 45 ரூபாய்.

முதல் தொழில்..

முதல் தொழில்..

அதன் பின், பல போராட்டங்கள், முயற்சிகளுக்குப் பின் 1987ஆம் ஆண்டுத் தனது விஸ்வரூப வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டும் வகையில் ஒரு சிறிய உணவகத்தைத் துவங்கினார் ராஜா. இன்று அவருக்கு வயது 54.

ஸ்ரீ ராஜா பிரியாணி ஹோட்டல் மற்றும் லாட்ஜ்

ஸ்ரீ ராஜா பிரியாணி ஹோட்டல் மற்றும் லாட்ஜ்

25 ரூபாயில் துவங்கி ராஜாவின் பயணம் இன்று, கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 3 அடுக்கு மாடி லாட்ஜ் மற்றும் 3 பிரியாணி கடைகளை வைத்துள்ளார்.

இன்றைய சந்தை மதிப்பீட்டில் மட்டும் இந்த லாட்ஜ் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு இருக்கும்.

 

சாலையோர தூக்கம்..

சாலையோர தூக்கம்..

ஆரம்பக் காலத்தில் கோயம்புத்தூரில் வேலை செய்துகொண்டு இருக்கும் போது பல நாட்கள் சாலையோரத்தில் தூங்கியுள்ளதாகவும் கூறிய ராஜா தினக்கூலி வாங்கும் விவசாயப் பெற்றோர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முறுக்கு வியாபாரம்..

முறுக்கு வியாபாரம்..

9வயதாக இருக்குபோது ராஜா அவர்களது பெற்றோர்களால் மானாமதுரைக்கு ஒரு வீட்டு வேலைக்காக அனுப்பட்டார். இந்த வீட்டில் கணவன் மற்றும் மனைவி முறுக்கு தயாரித்து விற்பனை செய்பவர்கள். இவர்களின் வீடு மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது மட்டும் அவர்களது பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியது ராஜாவின் வேலை.

அங்கு ஒரு வருடம் பணியாற்றிய ராஜாவிற்கு வியாபாரத்தில் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டது.

 

தேன் மிட்டாய்

தேன் மிட்டாய்

10வயதாகும் போது மீண்டும் பெற்றோர் உடன் சேர்ந்த ராஜா, அருகில் இருக்கும் அன்நதூர் கிராமத்தில் இருந்து தேன் மிட்டாய் மற்றும் கடலை மிட்டாய்களை வாங்கிப் பள்ளிக்கு வெளியில் விற்றார். இதில் கணிசமான லாபத்தையும் பார்த்தார் ராஜா.

இந்த முதல் வியாபாரத்தில் 70 பைசாவிற்கு மிட்டாய் வாங்கி 45 பைசா லாபம் பார்த்துள்ளதாக ராஜா திவீக்கெண்ட் லீடர் நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் பள்ளி கல்வியைத் தொடர்ந்தார் ராஜா.

 

சப்ளையர்

சப்ளையர்

கோயம்புத்தூர் ஹோட்டலில் வேலைக்குச் சேரும்போது வருபவர்களுக்குத் தண்ணீர் வைப்பதற்காக மட்டுமே பணியில் சேர்ந்த ராஜா, குறைவான காலத்திலேயே சப்ளையாராகவும் பணியாற்றத் துவங்கினார்.

இக்காலத்தில் கிடைத்த பணத்தை வைத்து தையல் பயிற்சி பெற்றார். இதற்கான 175 ரூபாய் கட்டணத்தைத் தான் சம்பாதித்த பணத்தில் இருந்தே கொடுத்தார் ராஜா.

 

மீண்டும் சொந்த ஊர்

மீண்டும் சொந்த ஊர்

கோயம்புத்தூரில் இருந்து மீண்டும் சொந்த ஊருக்கே சென்று தையல் வேலையுடன் சில சிறு தொழில்களையும் செய்துள்ளார் ராஜா. அதன் பின்பு 1984இல் மீண்டும் கோயம்புத்தூர்-க்கு திரும்பினார் ராஜா.

உக்கடத்தில் ஒரு ஹோட்டலில் அரவை மாஸ்டராகப் பணியாற்றினார். மாலையில் வாடகை சைக்கிள் மூலம் சட்டை மற்றும் ஜாக்கெட் பிட் துணிகளை விற்று சுமார் 1,000 ரூபாயை சேர்த்தார்.

 

சொந்த தொழில்..

சொந்த தொழில்..

1986ஆம் ஆண்டுப் பாப்பநாயக்கன் பாளையத்தில் 10X6 அளவில் ஒரு சிறியபெட்டி கடையைத் திறந்தார். அடுத்த ஒரு வருடத்தில் பரோட்டா மற்றும் உணவகத்தைத் திறந்தார் ராஜா.

வர்த்தகம் எதிர்பாத்தை விடவும் வேகமாக வளர்ந்தது. வர்த்தக அதிகரித்து வரும் நிலையில் கடையை விரிவாக்கம் செய்தார் ராஜா. அதன் பின் கடையில் அருகிலேயே ஒரு இடத்தையும் வாங்கியதாக ராஜா கூறினார்.

இங்கு இரண்டாவது கடையையும் திறந்தார்.

 

70 லட்சம் ரூபாய்

70 லட்சம் ரூபாய்

2007ஆம் ஆண்டுக் காந்திபுரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு லாட்ஜ்-யை தனது சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் மூலம் சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். இதன் அருகில் இருக்கும் 3 சென்ட் வாங்கி லாட்ஜ்-ஐ விரிவாக்கம் செய்தார் ராஜா.

தற்போது ராஜாவின் லாட்ஜ் மதிப்பு 10 கோடி ரூபாயாக உள்ளது. இதனைத் தாண்டி 3 உணவகங்கள் வைத்துள்ளார்.

 

வெற்றி பயணம்..

வெற்றி பயணம்..

25 ரூபாயில் துவங்கிய இந்தப் பயணத்திற்குக் கடின உழைப்பு மட்டுமே முதல் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

இவரது வெற்றி மிகவும் மதிப்புக்குரியது, காரணம் எந்தொரு பின்புலமும் இல்லாமல் சுயமாக முன்னேறி இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளார். ராஜா மேன்மேலும் வளரத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+