சல்மான் கான் முதல் அஜய் தேவ்கன் வரை.. சேவை வரி சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் தலைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சேவை வரிச் செலுத்துவதில் மோசடி செய்துள்ளதாகப் பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் மீது 156 வழக்குகளை பதிவு செய்துள்ளது சேவை வரித் துறை, மேலும் இவர்களது கணக்குகள் எல்லாம் தலைமை கணக்காய்வளரின் கட்டுப்பாட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

 

பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் அதிக வருமான வரி செலுத்தி வருகின்றார்கள். ஆனால் அதிலும் பலர் வரி ஏய்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டு அதனைக் கண்டறிந்த பிறகு அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது வழக்கம். இது கோலிவுட் நடிகர்களின் வீடுகளிலும் நடப்பது தான் என்றாலும் இந்த முறை பாலிவு நட்சத்திரங்கள் சேவை வரிச் செலுத்துவதில் சிக்கியுள்ளனர்.

முன்னணி நட்சத்திரங்கள்

முன்னணி நட்சத்திரங்கள்

பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களான சல்மான் கான், ரன்பீர் கபுர், அஜய் தேவ்கன் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் சேவை வரிச் செலுத்துவதில் மோசடி செய்துள்ளதாகச் சிஏஜி அறிக்கை வெளியாகியுள்ளது.

சிஏஜி அறிக்கை

சிஏஜி அறிக்கை

சேவை வரித் துறை அஜய் தேவகன், தேஷ்முக், ராம்பால் உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஆனா, சல்மான் கான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது என்ற விவரங்கள் தெரியவில்லை என்று சிஏஜி அறிக்கை கூறுகின்றது.

கண்காணிப்பில் என்ன சிக்கியது?
 

கண்காணிப்பில் என்ன சிக்கியது?

சேவை வரி துறையினர் கண்காணிக்கும் போது அஜய் தேவ்கன், அர்ஜூன் ராம்பால், ரிதேஷ் தேஷ்முக் மற்றும் சல்மான் உள்ளிட்டோர் தயாரிப்பாளருடன் போட்ட ஒப்பந்தத்தில் பயணத்திற்கான சேவைகள், ஏற்பாடு மற்றும் அலங்கரிப்பாளரின் அலங்காரம், முடி ஸ்டைலிஸ்ட் மற்றும் ஸ்பாட் பாய், பீர் உள்ளிட்ட சேவைகளாகப் பெற்றுள்ளனர். இதில் உள்ள சந்தேகங்களுக்குத் தான் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி முறைகேட்டில் சிக்கிய பச்சன்

அந்நிய செலாவணி முறைகேட்டில் சிக்கிய பச்சன்

அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அனைவரிடமும் கடந்த 13 ஆண்டுகளுக்கான வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைக் கேட்டு அமலாக்க துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அந்நிய செலாவணி முறைகேட்டில் இவர்களுக்குத் தொடர்பு இருந்து ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இவர்கள் இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானுக்கும் அந்நிய செலாவணி முறைகேடு செய்திருப்பதாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றது.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

ஒரே திரைப்படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்திய போது வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஊதியமும், இந்தியாவில் நடத்தப்பட்ட படப்பிடிப்புக்கு இங்கு இருந்து ஒரு நிறுவனமும் ஊதியம் அளித்தது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் 6.75 கோடி ரூபாயினை ஒரு லண்டன் நிறுவனமும், 83.43 லட்சம் ரூபாயினை இங்கிலாந்து நிறுவனமும் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why it's a taxing time for most of our Bollywood stars

Why it's a taxing time for most of our Bollywood stars
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X