வங்கிகளைத் தனியார்மயமாக்குதல், பொதுத்துறை வங்கிகளை இணைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம் வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தலைமை அமைப்பு
9 வங்கி யூனியன் மற்றும் பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அமைப்புகளுக்குத் தலைமை அமைப்பாக இருக்கும் AIBEA, பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான அறிவிப்பை AIBEA அமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.
முக்கியக் கோரிக்கை
ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் போராட்டம் வங்கிகளைத் தனியார்மயமாக்கம் செய்யக் கூடாது, பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்படக் கூடாது, மேலும் வங்கிகளில் இருக்கும் வராக்கடனைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்ற பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக வெங்கடாசலம் தெரிவித்தார்.
10 லட்சம் பேர்
நாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
வராக்கடன்
இந்திய வங்கித்துறையில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். பொதுத் துறை வங்கிகள் வராக்கடனைத் தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் வர்த்தகச் சந்தையில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
எஸ்பிஐ வங்கி
நாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் எஸ்பிஐ கடந்த 5 வருடத்தில் சுமார் 93,041 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications